ஹிஜாப் அணியாமல் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனையின் வீட்டை அந்நாட்டு அரசு இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது.
ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். மேலும், இஸ்லாமிய விதிமுறைகளை பெண்களை சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கலாசார காவல்படை என்ற சிறப்பு காவல்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. இப்பிரிவு போலீஸார் விதிமுறைகளை மீறும் பெண்களுக்கு அபராதம் விதிப்பது, கைது செய்வது மற்றும் பார்த்த இடத்திலேயே கடும் தண்டனை வழங்குவது என்பன போன்ற அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயது இளம்பெண், கடந்த செப்டம்பர் மாதம் தனது உறவினரை பார்ப்பதற்காக தலைநகர் தெஹ்ரான் நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார். அப்போது, அவர் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று சொல்லி கலாசார காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் போலீஸார் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பெண் உயிரிழந்தார். இது ஈரான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஈரான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், ஹிஜாப் அணிய மறுத்தும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைப் போராளிகள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப்பை எரிப்பது, தலைமுடியை கத்தரித்து எறிவது, மேலாடை இன்றி போராட்டம் என பல போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்போராட்டத்திற்கு அந்நாட்டின் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், பெண்களின் இப்போராட்டத்திற்கு ஆண்களும் ஆதரவு கொடுத்து போராடி வருகின்றனர். ஈரான் அரசு எவ்வளவோ அடக்குமுறைகளை கையாண்டும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தியும் அராஜகத்தில் ஈடுபட்டது. ஆனாலும், மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பணிந்த ஈரான் அரசு, கலாசார பிரிவை கலைப்பதாக அறிவித்தது. எனினும், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீராங்கனையான எல்னாஸ் ரெகாபி என்பவர், தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தடையேறுதல் போட்டியில் பங்கேற்க கடந்த மாதம் சென்றிருந்தார். அப்போது, அவர் இஸ்லாமிய அரசின் விதிகளை பின்பற்றாமல், ஹிஜாபை கழற்றிவிட்டு, தனது தலைமுடியை போனிடெயிலாக போட்டுக்கொண்டு போட்டியில் பங்கேற்றார். இவரது இச்செயல் ஹிஜாப் போராட்டக்கரார்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் எல்னாஸை ஹீரோ என்று பாராட்டினர். அதேசமயம், இவர் மீது ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்கிற அச்சமும் நிலவியது. எனவே, போட்டி முடிந்து ஈரான் திரும்பிய எல்னாஸ், தனது செயல் தற்செயலானது என்றும், உள்நோக்கம் இல்லை என்றும் கருத்து தெரிவித்தார். ஆனாலும், அனைவரும் பயந்தது போலவே எல்னாஸ் மீது ஈரான் அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. அதாவது, எல்னாஸ் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அந்நாட்டு அரசு, அவரது பதக்கங்களையும் சாலைகளில் தூக்கி வீசியிருக்கிறது.
ஆனா இந்தியாவுல….