எளிய மக்களுக்கு மலிவான உணவு வழங்கிடும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது அம்மா உணவகம். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவகங்கள் மூலம் குறைவான விலையில் உணவு வழங்கப்படுகிறது. இன்று (ஜூலை 19) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.
அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அம்மா உணவகத்தில் சமைக்கப்பட்ட உணவை முதல்வர் ஸ்டாலின் சாப்பிட்டு பார்த்தார். கரண்டியில் இருந்து உணவை கையில் எடுத்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு அந்த எச்சில் பட்ட சோற்றை மக்கள் சாப்பிடக்கூடிய உணவு வைத்திருந்த அதே பாத்திரத்தில் போடுகிறார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
முதல்வராக இருந்துகொண்டு ஸ்டாலின் இவ்வாறு செய்யலாமா ? இவரின் எச்சில் பட்ட உணவை மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் ? ஆய்வு செய்தது நல்ல விஷயம் தான். ஆனால் உணவை தனியாக ஒரு தட்டில் வைத்து சாப்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு திடீர் ஆய்வு செய்கிறேன் என்று கூறி 4,5 கேமராக்களை எடுத்து வந்து சாப்பாட்டை நக்கி பார்த்து மீதி சாதத்தை அதிலேயே போடுவது தான் நாகரீகமா முதல்வரே ?