அனைவரின் அலைபேசியிலும் திடீரென அலாரம் சத்தம் வந்ததும் பீதியடைந்துள்ளனர். இது பேரிடர் காலங்களில் அரசு தரப்பில் செயல்படுத்தப்பட சிறிய சோதனை என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால் தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டம் 20.10.2023 இன்று தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரியில் நடத்தப்பட்டது.
“செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.
இது இந்திய அரசின் தொலைதொடர்புத்துறை மூலம் செல் ப்ராட்காஸ்ட்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை செய்தி என்றும் நீங்கள் திடீர் அலாரத்தை கண்டு பயப்பட தேவையில்லை அதை புறக்கணித்து விட்டு உங்கள் வேலையை தொடருங்கள் என்று அரசு தரப்பில் குறிப்பிட்டுள்ளது.