தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்ந்த ஒரு குழுவானது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆய்வு நடத்தி உள்ளனர். அப்போது மாணவர்களிடம் ஒரு புத்தகம் ஒன்று வாங்கி படித்து பார்த்துள்ளனர். அப்புத்தகத்தில் கிறித்தவத்தில் வளர்ந்து வரும் நம்பிக்கையைக் கையாள்வதை பற்றி குறிப்பிட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதில் ஜெபிக்க தொடங்குங்கள் என்றும் கிறிஸ்துவ போதனை செய்யக்கூடிய சபையை கண்டுபிடித்து அங்கெ செல்லுங்கள் என்றும், உங்களுக்கு கடவுள் குறித்து சந்தேகம் எழுந்தால் உங்கள் கிறிஸ்துவ நண்பர்களிடம் பேசுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த NCPCR குழுவானது,சிறு குழந்தைகளை மதமாற்றம் செய்யவோ, மத நம்பிக்கைகளை பரப்பவோ அரசு பள்ளிகளை பயன்படுத்த முடியாது. இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்ந்த உறுப்பினர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

