அறநெறி போதிக்கும் பேராசிரியர்களே அநீதி செய்வது அறமா ?

அறநெறி போதிக்கும் பேராசிரியர்களே அநீதி செய்வது அறமா ?

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்டி இரண்டாம் ஆண்டு படித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த சுகிர்தா என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்மாணவி தங்கியிருந்த அறையினை காவல்துறையினர் பரிசோதித்தபோது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களான ப்ரீத்தி,ஹரிஷ் ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அந்த மூன்று பேரையும் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். மேலும் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பேராசியர் பரமசிவனிடம் ரகசிய விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர்.

அரை வயிறு கால் வயிறு கஞ்சி குடித்து அன்றாட கூலி வேலை செய்து தனது மகளை ஒரு பெரிய மருத்துவராக வேண்டுமென பல கனவுகளோடு மருத்துவ கல்லூரியில் சேர்த்தால், சில காட்டுமிராண்டிகளின் பாலியல் துன்புறுத்தலுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் இந்த அவலநிலையை மாற்ற அரசானது கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பல கனவுகளோடு கல்லூரி சேர விரும்பும் மாணவிகளின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


Share it if you like it