தேர்தல் வந்துவிட்டால் திடீர் சிவ பக்தர்களாகி விடுவதே காங்கிரஸ் கொள்கையா? – பிரணாப் முகர்ஜி மகள் விளாசல் !

தேர்தல் வந்துவிட்டால் திடீர் சிவ பக்தர்களாகி விடுவதே காங்கிரஸ் கொள்கையா? – பிரணாப் முகர்ஜி மகள் விளாசல் !

Share it if you like it

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி சமூக வலைதளப் பதிவில் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார்.

அதில் அவர், “காங்கிரஸ் கட்சியோ, காந்தி – நேரு குடும்பமோ என் தந்தைக்கு எந்த ஒரு பதவியையும் தானமாக வழங்கவில்லை. அவர் வகித்த பதவிகளுக்கு அவர் தகுதியானவராக இருந்ததால் அவற்றைப் பெற்றார். காந்தி குடும்பத்தினர் என்ன நிலச்சுவாந்தார்களா? அவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக மரியாதை கொடுத்து தொழ வேண்டுமா? காங்கிரஸ் கட்சியின் இப்போதைய கொள்கை தான் என்ன? தேர்தல் வந்துவிட்டால் திடீர் சிவ பக்தர்களாகிவிடுவதே அவர்களின் கொள்கையா?” என்று சரமாரியாக விமர்சித்துள்ளார்.


Share it if you like it