கடந்த 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும் செல்வப்பெருந்தகை நெல்லையிலிருந்து நான்கு வழிச்சாலையில் தென்காசி நோக்கி காரில் வரும்பொழுது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள ராமச்சந்திரபட்டணம் எனும் பகுதி வரை காரில் வந்து விட்டு பின்பு தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த பைக் பேரணியில் ஈடுபட்டார். அப்பொழுது செல்வப்பெருந்தகை மற்றும் அவருடன் பைக் பேரணியில் ஈடுபட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஹெல்மெட் எதுவும் அணியாமல் பைக் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரே இவ்வாறு செயல்படலாமா ? சட்டம் என்பது பாமர மக்களுக்கு மட்டும் தானா ? அரசியல் தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும் கிடையாதா ? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
மற்றொரு காணொளியில் பிரபல யூடிபர் இர்பானும் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டி செல்கிறார். அவரை எல்லாம் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கவில்லை ஏன் ? சமீபத்தில் யூடிபர் இர்பான் கனிமொழியையும், உதயநிதியையும் பேட்டி எடுத்தது குறிப்பிடத்தக்கது.