அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் செராவிக் எனப்படும் ஆற்றல் மற்றும் சுற்று சூழல் தொடர்பான மாநாட்டில் ‘செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்’ எனும் இந்த ஆண்டுக்கான விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான விருது ஆகும்.
மோடி சுற்று சூழலுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்தாலும் உலக நாடுகள் மற்றும் நம் நாட்டு மக்கள் அவரை சரியாக புரிந்து கொண்டுள்ளானர் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.