கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார். 2,310 பேருந்துகளை இயக்கும் திறன் கொண்ட இந்த பேருந்து முனையமானது செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் 393.74 கோடி ரூபாய் செலவில் ‘கலைஞர் நூற்றாண்டு பஸ் டெர்மினஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிரபலமான கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் செயல்படுத்தப்பட்டது.
புதிய பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள் : 215 பேருந்து நிறுத்தங்கள், தங்கும் அறைகள் – 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர் தங்கும் விடுதிகள், இலவச சுகாதார மையம், ஒரு மருந்தகம், பயணிகள் காத்திருக்கும் லாபி, லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள், சார்ஜிங் நிலையங்கள், கழிவுநீர். சுத்திகரிப்பு நிலையம், முகம் அடையாளம் காணும் கேமராக்கள். இவை தவிர, 100க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் உணவகங்கள், சாமான்களை எடுத்துச் செல்ல தள்ளுவண்டிகள், எலக்ட்ரிக் வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தொட்டுணரக்கூடிய தரை, தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் அறை, பெண்கள், ஆண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறைகளும் செய்யப்பட்டுள்ளன. பஸ் முனையத்தின் உள்ளே பூங்காவும் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடித்தளங்களில், தோராயமாக, 2,769 இருசக்கர வாகனங்களும், 324 இலகுரக வாகனங்களும் நிறுத்த முடியும்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நிவாரண நிதி தொடர்பாக கேட்ட கேள்விக்கு திமுக அமைச்சர் உதயநிதி நாங்க என்ன அவங்க அப்பா வீட்டு பணத்தையா கேட்டோம், மக்களோட வரிப்பணம் தானே. இவ்வாறு மிக தரக்குறைவாக பேசினார். இதற்கு பதிலடி தரும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன், நிர்மலா சீதாராமன் பேசினர்.
இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தை கொண்டு கட்டிய புதிய பேருந்து நிலையத்திற்கு சுதந்திர வீரர்களின் பெயரோ அல்லது அரசியல் பெருந்தலைவர்கள் பெயரோ வைக்காமல், கலைஞர் பெயரை வைத்துள்ளனர். இது என்ன அவங்க அப்பா வீட்டு பணமா என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.