விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் பின் பக்கம் உள்ள படிக்கட்டானது திடிரென்று உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் படிக்கட்டில் இல்லாததால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து உடைந்து கீழே விழுந்த படிக்கட்டினை நடத்துனர் கையில் எடுத்து வந்து பேருந்துக்குள் பொருத்துகிறார். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு பேருந்தில் படிக்கட்டுகள் உடைந்து விழுவதுதான் திராவிட மாடலா ? மக்களை சிரமப்படுத்துவதே திமுக அரசின் சாதனை. கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்த வரையில் மக்கள் விரைவாக அவர்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருந்தது. ஆனால் இப்போது கேளம்பாக்கத்தில் மாற்றி விட்டனர். அங்கு செல்வதற்கும் பேருந்து வசதிகள் இல்லை. பல மணி நேரம் வெளி ஊர்களுக்கு செல்லும் மக்கள் பேருந்து இல்லாமல் கால் கடுக்க வைக்கும் நிகழ்வானது அரங்கேறி உள்ளது. இதனால் மக்கள் பலரும் திமுக அரசை கிழி கிழி என்று கிழிக்கும் காணொளிகள் சமீபத்தில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மக்களின் உயிர் என்றால் அவ்வளவு இளக்காரமா திமுக அரசுக்கு ? மக்களுக்கு அத்தியாவசிய தேவையான பேருந்துகளையே சரியாகி நிர்வகிக்க திமுக அரசுக்கு துப்பில்லை. இவர்கள் கையில் தமிழ்நாட்டு மக்கள் சிக்கிக் கொண்டு அல்லல் படுகின்றனர் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் திமுக அரசை காரி துப்பும் விதமாக விமர்சித்து வருகின்றனர்.