இந்தாண்டு தீபாவளி நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரத காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தீபாவளி என்பது வால்மீகி ராமயணத்தின் படி, ராமர் ராவணனை வென்ற நாளாகும். மேலும் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமர் வனவாசம் முடித்து சீதாவுடன் அயோத்திக்கும் திரும்பிய நாள் தான் தீபாவளி என்று கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. தீமைகள் நீங்கி நம்மை பிறக்கும் நன்னாள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒளி மயமான வாழ்க்கைக்கு செய்யும் வேண்டுதல் என்றும் சொல்லப்படுகிறது.
தீபாவளி அன்று வீட்டில் இருக்கும் குழந்தைகள்,பெரியவர்கள்,பெண்கள் என அனைவருக்கும் எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை உடுத்தி அதிகாலையில் தீபாவளியை கொண்டாடுவார்கள். வழிபாடு நடக்கும். பின்னர் உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் இனிப்புகளோடு அவர்களின் இல்லங்களுக்கு செல்வது என கோலாகலமாக கொண்டாடப்படும். மாலை பொழுதில் வான வேடிக்கைகள் பட்டாசுகள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தில் திளைப்பார்கள். யார் வீட்டின் முன் அதிக வெடி வெடித்த குப்பைகள் இருக்கும் என்ற போட்டியும் நடக்கும்.
இந்நிலையில் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க அனுமதி கொடுத்துள்ளது தமிழக சுற்றுசூழல் துறை. காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை. தொடர்ந்து இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கு மட்டும் நேர கட்டுப்பாடு விதிப்பது எந்த விதத்தில் நியாயம். தீபாவளி என்கிற ஒருநாளுக்காக ஓயாது உழைத்து கொண்டிருக்கும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களின் நிலை என்னாவது என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.