புதுக்கல்லூரி என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனமாகும். 1951 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தன்னாட்சி அந்தஸ்துடன், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரிகளில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (MEASI) இக்கல்லூரி நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் இக்கல்லூரியில் தேர்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த தேர்வில் மதிப்பு கல்வி (value education) பாடத்திட்டத்தில் தேர்வை வைத்துள்ளனர் கல்லூரி நிர்வாகத்தினர். தற்போது அந்த தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாள் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பொது அறிவு வினாத்தாளில் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்காமல் மதம் சார்ந்த கருத்துக்களையே பொது அறிவு வினாத்தாளில் கேட்டு வைத்துள்ளனர்.
மேலும் அந்த வினாத்தாளில் ஸலாஹ் (தொழுகை) பற்றி ஏதேனும் இரண்டு ஹதீஸ்களை கூறுங்கள்
ஹஜ் செய்ய அத்தியாவசியமான நிபந்தனைகள் என்ன? ‘ஹராம்’ மற்றும் ஹலால் ஆகிய சொற்களை விளக்குங்கள், கப்ருக்கு (கப்ரு) வரும் மலக்குகளின் பெயர்களைக் குறிப்பிடுங்கள், அவர்களால் கேட்கப்படும் கேள்விகள் என்ன? ஜன்னாவில் நுழைவதாக முஹம்மது (ஸல்) அவர்களால் உறுதியளிக்கப்பட்ட ஏதேனும் ஐந்து சஹாபாக்களின் பெயர்களைக் கூறவும்? இவ்வாறு அவ்வினாத்தாளில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. கல்வி கற்கும் கல்லூரி மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதாக வினாத்தாள் இருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு பிஞ்சு மாணவர்களின் நெஞ்சில் மதம் சம்பந்த்தப்பட்ட கருத்துக்களை திணிக்கக்கூடாது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.