பத்துமலை முருகப்பெருமானை அவமதித்த இஸ்லாமிய அடிப்படைவாதி !

பத்துமலை முருகப்பெருமானை அவமதித்த இஸ்லாமிய அடிப்படைவாதி !

Share it if you like it

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் மிகவும் பிரசித்தி பெற்ற பத்துமலைகுகை முருகன் கோவில் மலேசியாவில் உள்ளது. அங்குள்ள முருகப்பெருமானின் அழகுமிக்க கம்பீரமான சிலை மற்றும் குகைக் கோயிலின் அற்புதமான கட்டிடக்கலை ஆகியவை கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்த கோவிலுக்கு ஹிந்து மதம் மட்டுமே அல்லாமல் பிற மதத்தினை சேர்ந்தவர்கள் கூட முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். இந்தக் கோவில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

ஹிந்து கடவுள் முன் குரான் ஓதும் இஸ்லாமிய அடிப்படைவாதி :-

மே மாதம் 19 ஆம் தேதி ஜேர்மனியைச் சேர்ந்த இஸ்லாமிய மதச் செல்வாக்குமிக்க அப்துல்லாதிஃப் ஓயிசா என்பவர் சர்ச்சைக்குரிய காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த காணொளியில், மலேசியாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான பத்துமலை குகைக் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சிலைக்கு பக்கத்தில் அப்துல்லாதிஃப் ஓயிசா நின்றுகொண்டு, சிலை வழிபாட்டுக்கு எதிராக குரானிலிருந்து ஒரு சூராவை ஓதும் காணொளியை வெளியிட்டார். அவர் ஓதிய குரான் வசனத்தின் பொருள், “அல்லாஹ்வைத் தவிர, உங்களுக்கு நன்மை செய்யவோ அல்லது உங்களுக்கு தீங்கு செய்யவோ முடியாத விஷயங்களை நீங்கள் வணங்குகிறீர்களா ? அல்லாஹ்வுக்குப் பதிலாக நீங்கள் வணங்கும் வேறு தெய்வங்கள் வருத்தம் அளிக்கிறது. பகுத்தறிவைப் பயன்படுத்த மாட்டீர்களா?” என்று வசனம் வாசிக்கும் போது, ​​அப்துல்லாதிஃப் மரியாதைக் குறைவாக முருகன் விக்ரஹத்தை நோக்கி விரலைக் காட்டி, சிலைகளை அல்ல, அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரிய சர்ச்சையையும், கடுமையான விமர்சனத்தையும் பெற்றது. இதனை தொடர்ந்து கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதியான அப்தெல்லதிஃப் ஓயிசா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துக்கள் கோரிக்கை வைத்தனர்.

சமூக ஊடகங்களின் ஆவேசம் :-

இந்துக்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதியான அப்துல்லாதிஃப் ஓயிசா வெளியிட்ட சர்ச்சை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது, மேலும் ஆத்திரமடைந்த இந்துக்கள் அந்த காணொளியின் கருத்துப் பிரிவில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அபிஷேக் சிங் என்பவர், “இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? மற்றவர்களின் புனித இடத்திற்கு நீங்கள் வர அனுமதித்தால், அவர்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும், நீங்கள் ஏன் அதை செய்யவில்லை? உங்கள் புனித இடத்தில் யாராவது இதைச் செய்தால், நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்? இவ்வாறு பதிலடி கொடுத்தார். பின்னர் டெனிசன் என்பவர், “இந்து மதத்தில் இவை எல்லாம் அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை ஒரு நன்மைக்கு சொந்தமானவை. நாங்களும் உங்களைப் போல் ஒரு கடவுளை நம்புகிறோம். கடவுளைத் தவிர வேறு எதையும் யாரும் வணங்குவதில்லை. இப்போது நீ அவமரியாதை செய்யும் இடத்தை விட்டு வெளியேறு” என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ராகினி குணசேகரன் என்ற மலேசிய இந்து, “நீங்கள் மலேசியாவுக்கு வாருங்கள்; ஆனால் இங்குள்ள பல , கலாச்சாரம் மற்றும் மதத்தை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அப்துல்லாதிஃப் ஓயிசா செய்த செயலுக்கு இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஹர்ஷத் என்பவர், இது “மிக மோசமான நடத்தை அண்ணா, இதை ஒரு முஸ்லீமிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் பிரபலமடைவதற்கு மதம் அல்லது கலாச்சாரத்தை அவமதிக்க கூடாது. பார்வையாளர்களிடையே நீங்கள் வெறுப்பைத் சம்பாதிக்க தொடங்கி விட்டீர்கள். இது தானே ஹராம். ஒருவரின் உணர்ச்சிகளை புண்படுத்துவது தான் ஹராம் மற்றும் அனைவரையும் மதிப்பது இஸ்லாம்” என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து சமூக வலைதள பயனாளியான Incognito என்பவர், தனது சமூகவலைத்தள பக்கத்தில் அப்துல்லாதிஃப் ஓயிசா பேசிய காணொளியை பகிர்ந்து, வேண்டுமென்றே இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அப்தெல்லதீஃப் ஓய்சா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவு அமைச்சரும் மலேசியப் பிரதமருமான இப்ராஹிம் அன்வாரைக் டேக் செய்து பதிவிட்டார்.

யார் இந்த அப்துல்லாதிஃப் ஓயிசா ? :-

அப்துல்லாதிஃப் ஓயிசா,மொராக்கோ தாவா வம்சாவளியை சேர்ந்தவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவர் டிக் டாக்கில் மட்டும் தனது பக்கத்திற்கு 71 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களை (Likes) பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இவரது யூ டியூப் சேனலான அப்டீன் டியூப் (Abdeen Tube) 2 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

மேலும் இவர் முகநூல் மற்றும் ஸ்னாப்சாட்டிலும் செயலியிலும் உள்ளார். பிற மத செல்வாக்கு உள்ளவர்களுடன் தெருவிவாதத்தில் கலந்து கொண்டு, பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதும், முஸ்லீம் அல்லாதவர்களை குர்ஆனிலிருந்து அவர் சூரா ஓதுவதைக் கேட்கும்படி செய்வதும், குர்ஆனிலிருந்து சூராவை படியுங்கள் என்று முஸ்லிம்களிடம் கூறுவதும், மிகவும் நெரிசலான தெருக்களில் குர்ஆன் சூராவை சத்தமாக ஓதுவது போன்ற நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை தான் வழக்கமாக கொண்டுள்ளார்.

லண்டன், பெர்லின், பாரிஸ், டுசெல்டார்ஃப் போன்ற முக்கிய ஐரோப்பிய நகரங்களில் அப்துல்லாதிஃப் தனது மதத்தை பரப்பும் நடவடிக்கைகளை செய்து வருகிறார். மேலும் அடிக்கடி ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மத்திய ஈஸ்டர் நாடுகளுக்கும் பயணம் செய்து வருகிறார். மேலும் இவர் அப்தீன் அகாடமி என்ற ஆன்லைன் அகாடமியை ஒன்றை நடத்தி வருகிறார். அதில், அரபு மொழி, குர்ஆன் மனப்பாடம் செய்தல் இரண்டு ஆண்டு ஆன்லைன் ஹபீஸ் பாடநெறியை கற்பித்து வருகிறார். பாரம்பரிய மொராக்கோ மற்றும் எமிராட்டி உடைகள், தகியா தொப்பி, அரபு தாவணி மற்றும் மிஸ்வாக் ஆகியவற்றை விற்கும் ஒரு கடையையும் அவர் வைத்திருக்கிறார்.

மலேசியாவில் 6 சதவீதத்திற்கும் அதிகமான இந்து மக்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள். சமீப காலமாக, மலேசியாவில் உள்ள தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் மதமாற்றத்திற்காக இந்து மக்களை குறிவைத்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் இந்துக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றுவது அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகிறது. 2023ல், சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளியன்று தொழுகைக்குப் பிறகு, மலேசியப் பிரதமரே ஒரு இந்து இளைஞரை வெளிப்படையாக இஸ்லாத்திற்கு மாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்துக்களை மட்டும் குறிவைக்காமல், மலேசியாவில் இந்து அடையாளத்தையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர். இதற்கு அப்துல்லாதிஃப் ஓயிசா ஒரு சிறந்த உதாரணம்,


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *