ஜனவரி 31 அன்று குஜராத் மாநிலத்தின் ஜுனாகத்தில் உள்ள ஒரு திறந்தவெளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒன்றுகூட்டி, இஸ்லாமிய மதபோதகரான மௌலானா முஃப்தி சல்மான் அஸ்ஹாரி மத வெறுப்புணர்வை பரப்பும் வகையில் உரை நிகழ்த்தினார், அந்த உரையின் காணொளியானது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது. இது அஸ்ஹாரி மற்றும் உள்ளூர் அமைப்பாளர்களான முகமது யூசுப் மாலிக் மற்றும் அசிம் ஹபீப் ஒடெட்ரா ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது.
ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பேசியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153பி மற்றும் 505(2), 188, 114 ஆகியவற்றின் கீழ் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவது தொடர்பான பிரிவுகளின் கீழ் மௌலானா முஃப்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. குஜராத் ஏடிஎஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் மௌலானா முஃப்தி சல்மான் அஸ்ஹாரியை கைது செய்தது.
அவர் பேசிய பேச்சில் ‘இந்துக்கள் நாய்கள், இது அவர்களின் நேரம், ஆனால் எங்களின் நேரம் வரும்” இவ்வாறு மிகவும் ஆக்ரோஷமாக முப்தி சல்மான் அஸ்ஹாரி பேசியுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையாகி இஸ்லாமிய மதபோதகருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://x.com/MrSinha_/status/1753370333820960973?s=20
source : organiser