சில மாதங்களுக்கு முன்பு சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய திமுக அமைச்சர் உதயநிதி, இன்று சபரிமலை பக்தர்களை குறிவைத்து ஓட்டுகளை பெறுவதற்காக சபரிமலைக்கு புதிய ரயில் பாதை உருவாக்கப்படுமென நாடகம் ஆடுகிறார் என்று இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
நேற்று தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி அவர்கள், திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு புதிய ரயில் பாதை உருவாக்கப்படுமென பேசிய அதே நாளில், திருவண்ணாமலையில் தரிசனத்திற்கு முன்னேற்பாடுகள் இல்லாததால் திருவள்ளூரைச் சேர்ந்த ராஜராஜன் என்பவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இவர்கள் ஆட்சி செய்யும் தமிழகத்திலேயே பல கோவில்களை இவர்களால் பராமரிக்க முடியவில்லை. பல கோவில்களில் பக்தர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர். அறநிலையத்துறையின் மூலம் கோவில்களை எல்லாம் தன் வசப்படுத்திக் கொண்டு கோவில்களை கவனிக்காத திமுக தற்போது சபரிமலையின் மீது அக்கறை செலுத்துவது தேர்தல் காலத்தில் அளிக்கின்ற பொய்யான வாக்குறுதியே..!!
அப்படியே பார்த்தாலும் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க போவதில்லை. உதயநிதி ஏதோ தன்னை மத்திய அமைச்சர் என்று நினைத்துக் கொண்டு திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைப்பேன் என வாக்குறுதி கொடுப்பது, சிரிப்பு வராத காமெடியாகும். சில மாதங்களுக்கு முன்பு சனாதனத்தை ஒழிப்பேன் என்று வாய் கிழிய பேசியவர் இன்று சபரிமலை பக்தர்களை குறிவைத்து ஓட்டுகளை பெறுவதற்காக நாடகம் ஆடுகிறார். இனி நீங்கள் எத்தனை அரிதாரம் பூசினாலும் இந்துக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய உதயநிதி எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஹிந்துக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார். தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதி கொடுப்பது திமுகவிற்கு புதிதல்ல. சனாதனத்தை ஒழிப்பேன் என்று வாய் கிழிய பேசிவிட்டு இன்று ஓட்டுக்காக ஹிந்துக்களிடமே கையேந்தும் உதயநிதிக்கு வெக்கமாக இல்லையா என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் உதயநிதியை வறுத்தெடுத்து வருகின்றனர்.