ஹமாஸை வேட்டையாட தயாராகும் இஸ்ரேல் – பக்கபலமாக நிற்கும் அமெரிக்கா – பிரிட்டன் – பாரதம் !

ஹமாஸை வேட்டையாட தயாராகும் இஸ்ரேல் – பக்கபலமாக நிற்கும் அமெரிக்கா – பிரிட்டன் – பாரதம் !

Share it if you like it

சமீபமாக பாலஸ்தீனத்தை தளமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலிய பொதுமக்கள் ராணுவத்திற்கு எதிரான பெரும் தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரையும் கொன்றதோடு ஆண் பெண் குழந்தைகள் இஸ்ரேலுக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் பலரையும் பிணைய கைதிகளாக கடத்தி வைத்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு வளையமான அயன் டோம் சிஸ்டத்தை தகர்த்து நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதல் தனது தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக கருதிய இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதலை பாலஸ்தீனம் ஹமாஸின் மீது தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தொடர்ச்சியாக தாக்கி இஸ்ரேலை நிலை குலைய வைத்து அதை வெற்றியாக ஹமாஸ் கொண்டாடியது. உலகம் முழுவதிலும் இருந்த ஹமாஸ் ஆதரவாளர்களும் பாலஸ்தீன ஆதரவாளர்களும் அதை இஸ்ரேலுக்கு எதிரான தோல்வியாகவும் ஹமாஸின் வெற்றியாகவும் கொண்டாடி தீர்த்தார்கள். இதில் வெகுண்டு எழுந்த இஸ்ரேல் அரக்கத் தனமான யுத்தத்தை அரங்கேற்றத் தொடங்கியது. மனிதாபிமானம் என்றால் என்ன ? என்று கேட்கும் அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கூட பயன்படுத்தி தாக்குதல் தொடுத்ததாக பாலஸ்தீன தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது . ஆனாலும் இஸ்ரேல் முன்வைத்த காலை பின் வைப்பதற்கு இல்லை என்று கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இஸ்ரேலின் கிழக்கு மேற்கு தெற்கு கரைகளை முழு யுத்த களமாக மாற்றிய இஸ்ரேல் காசாவில் இருக்கும் பொது மக்களை கட்டாயமாக வடக்கு கரைக்கு இடப்பெயர்வு செய்தது.

நீண்ட நாட்களாக அமைதியாக இருந்து வந்த இஸ்ரேலை வலுக்கட்டாயமாக பெரும் தாக்குதல் நடத்தி யுத்தத்திற்கு வம்படியாக அழைத்தது ஹமாஸ்தான். ஆனால் ஹமாஸின் பின்னணியில் இருந்த பாலஸ்தீனம் லெபனானில் இருக்கும் ஹிஸ்புல் ஹமாஸ். ஹமாசை நேரடியாக ஆதரிக்கும் எகிப்து ஈரான் துருக்கி லெபனான் உள்ளிட்ட எந்த ஒரு நாடும் இதுவரை இதுவரை காசாவில் இருக்கும் மக்களை தற்காலிக அகதிகளாக கூட ஏற்பதற்கு தயாராக இல்லை . அவர்களுக்கு தேவையான எந்த ஒரு உதவியும் செய்வதற்கும் தயார் இல்லை. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலை மட்டும் மனிதாபிமானமற்ற தாக்குதல் . இஸ்ரேலில் காசாவில் இருக்கும் மக்களை கட்டாயமாக இடப்பெயர்வு செய்யக்கூடாது என்று ஜோர்டான் மன்னர் அப்துல்லா உள்ளிட்ட பலரும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களின் கண்டனத்தை எல்லாம் குப்பையில் தூக்கி எறிந்து விட்டு இஸ்ரேல் தனது வெறித்தனமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் என்னும் பயங்கரவாத இயக்கத்தை இத்தோடு முழுவதுமாக முடித்து வைக்க வேண்டும் என்ற முழு உறுதியோடுதான் இம்முறை களமிறங்கி இருக்கிறது. இதற்கு அமெரிக்கா பக்க பலமாக களம் இறங்கி ஏற்கனவே தனது இரண்டு போர்க்கப்பல்களையும் அனுப்பி இருக்கிறது. தரை கடல் வான் வழி தாக்குதல் நடத்தும் சிறப்பு கமாண்டோ படைகளையும் இஸ்ரேலுக்கு துணையாக அனுப்பி வைத்திருக்கிறது . கடந்த வாரம் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலரும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் இஸ்ரேலுக்கு நேரில் வந்திருந்து இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து பிரிட்டன் இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கிறது. பிரிட்டன் பிரதமர் இஸ்ரேலின் ஹமாசுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு போருக்கு முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார். இதோடு களத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது படைகளையும் அவர் அனுப்புவதற்கு தயாராகி வருகிறார்.

இதனிடைய இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒவ்வொன்றாக கருத்து தெரிவிக்க தொடங்கியவுடன் பதிலடியாக அமெரிக்க அதிபர் நேரடியாக இஸ்ரேலுக்கு பயணித்திருக்கிறார். அவர் இஸ்ரேலில் இருந்தபடியே ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலிய யுத்தத்தில் அமெரிக்கா முழுமையாக பங்களிப்பு வழங்குகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை பதிவு செய்திருக்கிறார். மேலும் இது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்குமான யுத்தம் அல்ல. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் என்னும் பயங்கரவாத அமைப்பிற்கும் இடையேயான யுத்தம் என்றும் இதில் ஹமாஸிற்கும் இஸ்ரேலுக்கும் தவிர வேறு யாருக்கும் களத்தில் வேலை இல்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார். மேலும் ஹமாஸ் என்னும் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் களமிறங்கும் பட்சத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாசுக்கு ஆதரவாக வேறு ஏதேனும் அமைப்புகள் வேறு ஏதேனும் நாடுகள் களமிறங்கினால் அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு அமைதி காக்காது என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார். இதன் பொருள் யாதெனில் ஹமாசுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்ற பெயரில் லெபனானில் இருக்கும் ஹிஸ்புல் ஹமாஸ் களமிறங்கினால் அதை எதிர்கொள்ள அமெரிக்க படைகள் தயாராகிறது என்று அர்த்தம். பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் லெபனான் துருக்கி துருக்கி ஈரான் உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் பட்சத்தில் அவை அனைத்தையும் மொத்தமாக எதிர்த்து களமிறங்க அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று பொருள்.

இன்று அல்லது. நாளை நாளை பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை நேரில் ஆய்வு செய்யவும் இஸ்ரேலுக்கு பிரிட்டனின் முழு ஆதரவை உறுதி செய்யவும் அவர் பயணிப்பதாக தெரிகிறது. அமெரிக்க அதிபரின் வருகை மற்றும் பிரிட்டன் பிரதமரின் வரப்போகும் செய்திகளை அறிந்த அரபு நாடுகள் ஒட்டு மொத்தமாக மீண்டும் மௌனம் காக்கிறது. இதில் எகிப்து இன்னும் ஒரு படி மேலே போய் பாலஸ்தீன மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க இஸ்ரேலுக்கு சாதகமான நிகழ்வாகும். நேற்று வரை காசாவில் இருக்கும் மக்களை தனது தேசத்தில் தற்காலிக அகதிகளாக கூட அனுமதிக்க தயார் இல்லாத எல்லைகளை மூடி பாதுகாப்பை பலப்படுத்தியது எகிப்து.

இம்முறை இஸ்ரேல் முழு மூச்சுடன் களமிறங்கி இருப்பது வெறுமனே ஹமாஸ் என்னும் இயக்கத்தோடு ஒரு சிறு போரை நடத்தி அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதாக தெரியவில்லை. இஸ்ரேலின் நிதானித்த படை நகர்வும் தெளிவான திட்டமிடலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட போர் வியூகங்களும் தெளிவாக சொல்வது ஒன்றே ஒன்றைத்தான். இம்முறை ஹமாஸ் என்னும் இயக்கம் அதன் பின்னிருந்து ஆதரிக்கும் ஒட்டுமொத்த பயங்கரவாத இயக்கங்களுக்கும் முடிவுரை எழுதி விட்டு தான் இஸ்ரேல் அமைதி அடையும் என்பது தெளிவாகத் தெரிகிறது. காரணம் இம்முறை இஸ்ரேல் அனுபவித்த இழப்புகளும் வேதனைகளும் அவ்வளவு ஆழமானவை. இஸ்ரேலில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொல்லும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் காணொளிகள் இஸ்ரேலிய பொதுமக்களை கொடூரமாக துன்புறுத்திக் கொண்டு உயிரோடு இருக்கும் ஹமாசின் வெறியாட்டங்களை பார்த்த பிறகும் தேசிய இறையாண்மை உள்ள எந்த ஒரு நாடும் அரசும் பாதுகாப்பு அமைப்புகளும் மனிதாபிமானம் என்ற எல்லையை கடந்து தான் யுத்தத்தில் இறங்கும். இன்று அதைத்தான் இஸ்ரேல் செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான் தொடர்ச்சியான பயங்கரவாதத்தால் பெரும் பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புக்களையும் கடந்து வந்த பாரதம் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வெளிப்படையாக களமிறங்கி இருக்கிறது.

நேற்று வரை இஸ்ரேலுக்கு மனிதாபிமானம் பற்றி பாடம் நடத்திய எகிப்து உள்ளிட்ட நாடுகள் என்று அந்த மனிதாபிமானத்தை தாங்கள் கடைபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆளாகினார்கள் என்பதைவிட அமெரிக்காவின் ராஜதந்திரம் எகிப்து லெபனான் உள்ளிட்டவற்றை இறங்கி வரச் செய்திருக்கிறது என்பதே உண்மை. எந்த மக்களுக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்களோ ? அவர்களுக்கு முதலில் நீங்கள் உங்கள் ஆதரவை கொடுங்கள் என்பதே அந்த நிர்பந்தம். எந்த மக்கள் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக நேற்று வரை இருந்தார்களோ? அவர்கள் முதலில் அந்த பயங்கரவாதத்தின் பலனை அறுவடை செய்யட்டும் என்பதே பாலஸ்தீன மக்களின் மீதும் அமெரிக்கா இஸ்ரேல் வைக்கும் நிர்பந்தம்‌ இவையெல்லாம் இன்று நேற்று வரை பாலஸ்தீனத்தை தளமாக கொண்டு செயல்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரித்த மக்களை விதைத்ததன் பலனை அறுவடை செய்ய வைத்திருக்கிறது. மேலும் மத ரீதியாக பாலஸ்தீனத்திற்கும் ஹமாஸ் பயங்கரவாதத்திற்கும் ஆதரவு தெரிவித்து விட்டு யுத்தம் பிரச்சனை என்று வருமானால் அமைதியாக எல்லைகளை பூட்டிக்கொண்டு மௌனம் காக்கும் அண்டையில் இருக்கும் அரபு நாடுகளையும் முகத்தில் அறைகிறது. நீங்கள் எங்களுக்கு நடத்தும் பாடங்களை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கள் என்று கட்டாயத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இனி வரும் காலங்களில் யுத்த களத்தில் போக்கு நிச்சயம் மாறக்கூடும்.

இனி எகிப்து லெபனான் ஈரான் உள்ளிட்ட நாடுகள் வரிசை கட்டி பாலஸ்தீன மக்களுக்கு உணவு மருந்து பொருட்கள் வழங்குகிறோம். மனிதாபிமான உதவிகளை செய்கிறோம் என்ற களத்தில் இறங்குவார்கள். அதோடு அவர்களின் எல்லைகளை நிறுத்திக் கொள்வார்கள். மாறாக ஹமாசுக்கு ஆதரவளிக்கிறோம் என்றோ பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் பண உதவி செய்கிறோம் என்றோ இனி களத்தில் இறங்க முடியாது. அப்படி இறங்கும் பட்சத்தில் இஸ்ரேலோடு சேர்ந்து அமெரிக்காவும் பிரிட்டனும் பேயாட்டம் ஆடுவதற்கு அங்கு தயாராக இருக்கிறது. அதன் விளைவுகள் உலக வரைபடத்தில் இருந்து சில நாடுகளை அப்புறப்படுத்தவும் தயங்காது என்பதை பாலைவனத்தில் இருக்கும் நாடுகள் நன்கு அறியும் . அதனால் நிச்சயம் இனி இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் எதிரான யுத்தத்தில் எந்த ஒரு அரபு நாடும் களம் இறங்காது. அவ்வகையில் ஹமாஸ் என்னும் பயங்கரவாத இயக்கம் உலக அரங்கில் குறிப்பாக மதரீதியான ஆதரவை வழங்கி வந்த அரபு நாடுகளில் இருந்தே முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது பாலைவன நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்து உலக மத்திய கிழக்கு நாடுகளிலேயே நிரந்தரமான ஒரு அமைதியை ஏற்படுத்துவதற்கு உகந்த ஒரு சூழலே.

இதன் மூலம் இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்அமாஸ் இயக்கம் கூட வாய் திறக்க முடியாது. அது ஹமாசுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் எகிப்து களமிறங்கி ஹிஸ்புல் ஹமாஸை முடித்து வைக்க தயாராகும். இல்லை எனில் இல்லையெனில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளோடு இணைந்து இணைந்து கோரமான தாக்குதலை நிகழ்த்த தயாராக இருக்கும் இஸ்ரேலை லெபனான் தன்னந்தனியாக நின்று எதிர் கொள்ள வேண்டும் . அது கனவிலும் நடக்காத செயல் என்பது லெபனான் நன்கு அறியும் . அதனால் தன்னுடைய தேசத்தையும் ஆட்சியையும் மக்களையும் காப்பாற்றிக்கொள்ள மனிதாபிமான உதவிகளை பாலஸ்தீன மக்களுக்கு செய்வதோடு லெபனான் தனது எல்லையை நிறுத்திக் கொள்ளும்.

இனி வரும் நாட்களில் இஸ்ரேல் இன்னும் கொடூரமான யுத்தங்களை அரங்கேற்றக் கூடும். அதன் மூலம் ஹமாஸ் என்னும் பயங்கரவாதமும் அதன் பொருளாதார மூலங்களும் அடித்து நொறுக்கப்படும். அதே நேரத்தில் இதுவரையில் அந்த இயக்கத்திற்கு பின்புலத்திலிருந்து ஆதரவு கொடுத்து வந்த நாடுகள் ராஜயரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும். ஹமாசுக்கு ஆதரவளித்து வந்த பயங்கரவாத அமைப்புகளும் சர்வதேச அளவில் பெரும் தடைகள் நெருக்கடிகளை அனுபவிக்கக்கூடும். அது இனிவரும் காலத்தில் இஸ்ரேலுக்கு எதிராக அல்லது வேறு எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் ஒரு பயங்கரவாத அமைப்பு வேறு ஒரு நாட்டின் துணையோடு வேறு ஒரு நாட்டில் தளமாக இருந்து கொண்டோ தாக்குதல் நடத்துவதற்கு அஞ்சும் நிலை வரும். அதை ஆதரிக்கவும் ஆதரிக்கவும் களத்தில் துணையாக போருக்கு இறங்கவும் எந்த ஒரு நாடும் தயாராக இருக்காது. முதலில் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுவோம். பிறகு உலகில் இல்லாமல் அப்புறப்படுத்தப்படுவோம் என்ற அச்சம் பாலைவன பிரதேசத்தில் மத பயங்கரவாதத்தை முடித்து வைத்து நிரந்தரமான அமைதிக்கு வழிவகுக்கும். அதற்கான வழிமுறைகளை தான் இஸ்ரேல் முன்னெடுக்கிறது. அதைத்தான் அமெரிக்கா பிரிட்டன் பாரதம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக பின் இருந்து செய்து கொண்டிருக்கிறது.


Share it if you like it