உச்சகட்ட நெருக்கடியிலும் தன் இயல்பில் மாறாத இஸ்ரேல் நெகிழ வைக்கும் இஸ்ரேலின் தேசிய உணர்வு

உச்சகட்ட நெருக்கடியிலும் தன் இயல்பில் மாறாத இஸ்ரேல் நெகிழ வைக்கும் இஸ்ரேலின் தேசிய உணர்வு

Share it if you like it

இஸ்ரேல் உலகின் மிகச் சிறிய நாடு. மிகக்குறைந்த மக்கள் தொகை மிக சிறிய பரப்பளவு சுற்றிலும் அந்நிய மதம் சார்ந்த அரபு நாடுகள். அரபு நாடுகளுடன் இருக்கும் மத ரீதியான பகைமை . அதன் காரணமாக எந்நேரமும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்று எப்போதும் ஒரு போர் பதற்ற மனநிலையிலேயே இருக்கும் நாடு இஸ்ரேல். ஆனாலும் குறைந்த மக்கள் தொகை கொண்ட போதிலும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி . என் நிலையிலும் தேசத்திற்கு எதிராக எந்த இழப்பையும் ஏற்பதற்கு தயாராக இருக்கும் உச்சகட்ட தேசபக்தி. தேசப் பாதுகாப்பு தேசிய இறையாண்மை என்று வரும்போது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் தலைமைக்கும் பாதுகாப்பு முகமைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சமூகப் பொறுப்புணர்வு இவை எல்லாம் இன்றளவும் இஸ்ரேலிய மக்களையும் மண்ணையும் கௌரவமாக நிலை நிறுத்தி இருக்கிறது.

வலுவான உளவுத்துறை கட்டமைப்பு இஸ்ரேலின் மக்களுக்கும் மண்ணிற்கும் நலமும் பாதுகாப்பும் சேர்க்கும் வகையிலான வலுவான வெளியுறவுத்துறை நடவடிக்கைகள். தனது தேசத்தின் நலன் பாதுகாப்பு என்று வரும்போது சமரசம் இல்லாத தேசிய இறையாண்மை என்று தனது உயரிய நிலைப்பாடுகளால் தான் இன்றளவும் இஸ்ரேல் சுற்றிலும் பகை இருந்த போதிலும் அனைத்து பகை நாடுகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் சிம்ம சொப்பனமாக வாழ முடிகிறது . அதன் வெளிப்பாடு தான் இந்த யுத்த நெருக்கடியிலும் உச்சகட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருக்கும் போது கூட இஸ்ரேல் தனது அடி பிறழாமல் மாட்சிமையோடு அரச பரிபாலனம் செய்ய முடிகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி. எப்போதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒரு ராணுவ கட்டமைப்பு ரிசர்வ்டு ஆர்மி என்ற பெயரில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் பாதுகாப்பு கட்டமைப்பு என்று உயர்ந்த பாதுகாப்பு வளையத்தை தேசத்திற்காக எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பது இஸ்ரேல் . இந்த நெருக்கடியான நிலையில் கூட இஸ்ரேல் தன் தேசத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களை பாதுகாக்க தவறவில்லை . அந்தந்த நாடுகள் இஸ்ரேலில் இருக்கும் தங்கள் குடிமக்களை பத்திரமாக மீட்டு போவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் . உங்களுக்கு உதவுவதற்கு இஸ்ரேல் முழு முனைப்போடு தயாராக இருக்கிறது. அவர்களை பாதுகாப்பாக உங்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் கடமையும் பொறுப்பும் எங்களுக்கும் இருக்கிறது என்று சொல்லி இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டவர்களை எல்லாம் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி அவர்களை அந்தந்த நாடுகளின் வெளியுறவுத் துறையிடம் பத்திரமாக ஒப்படைத்து வருகிறது.

மறுபக்கம் துருக்கி ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மறைமுகமாக ஹமாஸ் பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கையில் இருப்பதை அறிந்து சுதாரித்துக் கொண்டு எந்நேரமும் பதற்றம் பெரும் போராக வெடிக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடும் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாக துருக்கியில் இருக்கும் இஸ்ரேலியர்கள் எவ்வளவு சீக்கிரம் துருக்கியை விட்டு வெளியேற முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் வெளியேறுங்கள் என்று எச்சரிக்கை அறிவிப்பை கொடுத்திருக்கிறது. இது மேலும் பல அண்டை நாடுகளுடன் விரிவடையலாம். ஆனால் அங்குள்ள மக்களோ ஊடகங்களோ ஆட்சியாளர்களுக்கோ அரசு எந்திரத்திற்கோ எதிராக குரல் எழுப்பவில்லை. மாறாக பத்திரமாக அரசு உத்தரவின் பெயரில் தங்களை பாதுகாத்துக் கொள்ள தயாராகிறார்கள். முடியாத பட்சத்தில் தேசத்திற்காக தங்களை இழக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இஸ்ரேல். அந்த சிறப்பு தான் இன்றளவும் இஸ்ரேலை உலகில் பாதுகாப்பாக கௌரவமாக வாழ வைக்கிறது.

இஸ்ரேலின் பிரதமராக இருப்பவர் தனது மகனை போர்க்களத்திற்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கிருந்து கொண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவு இஸ்ரேலுக்கு எதிர்ப்பு என்று மனிதாபிமான பாடம் நடத்துபவர்கள் எல்லாம் தங்களின் தொப்புள்கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்ட இலங்கையின் ஈழ யுத்தம் இறுதி கட்டத்தில் இருந்தபோது மருந்து உணவு பொருட்களை கூட நேரடியாக கொண்டு போகவோ அல்லது அவர்களின் சகாக்களின் மூலம் அனுப்பி வைக்கவோ தயார் இல்லை. இதுதான் அவர்களின் உண்மையான தொப்புள் கொடி பாசம்.

இன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்று மனிதாபிமான பாடம் எடுத்தும் காங்கிரசின் ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தேசத்தை நெருக்கடி சூழ்ந்த போது விதிகளை மீறி விமானியாக இருந்த போதும் விடுமுறை எடுத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு பயணப்பட்டவர்கள் என்பது பாரதத்தின் துரதிருஷ்டமான வரலாறு.

இன்று மத்திய அரசுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் நல்லெண்ணம் நட்புறவு அண்டை நாடுகளுடன் உறவு பாராட்டுவது எப்படி ? என்று தினமும் பாடம் நடத்தும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கட்சிகளின் வழிகாட்டுதலில் தான் அரை நூற்றாண்டு காலம் இந்த தேசத்தின் ஆட்சியும் ராஜ்யப் பரிபாலனமும் இருந்தது. அந்த காலகட்டத்தில் எத்தனை விமான கடத்தல்கள் ? எத்தனை ஆள்கடத்தல்கள் நடந்திருக்கிறது ? அவற்றின் பின்னணி என்ன ? என்பதை சற்று வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பாருங்கள் . திட்டமிட்டு நடத்தப்பட்ட கடத்தல் நாடகங்கள் அதன் மூலம் . விடுவிக்கப்பட்ட பயங்கரமான தீவிரவாதிகள். பணயமாக பெறப்பட்ட பணம் தங்கம் உள்ளிட்டவற்றின் மதிப்புகளை பாருங்கள். இந்த தேசத்தை சூழ்ந்திருக்கும் உள் நாட்டு துரோகத்தின் ஆழம் புரியும்.

அவர்கள் எல்லாம் இன்று மாநில தேசிய அரசியலில் காங்கிரசோடு கூட்டணியாக அரசியல் களத்தில் கைகோர்த்து நிற்பதை யோசித்துப் பாருங்கள். இவையெல்லாம் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விளக்கப்படுவதற்கு முன்பு இருந்த நிலை. இவர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை எதிர்த்தவர்கள் . இன்று வரை எதிர்த்து வருபவர்கள். ஆனால் ஆனால் பயங்கரவாதம் பிரிவினைவாதம் உள்ளிட்டவற்றை ஒரு கையில் வளர்த்துக் கொண்டே மறுக்கையில் மரு கையில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தியவர்கள். இன்று வந்து மத்திய அரசுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரம் தொடங்கி சர்வதேச விஷயங்களில் எல்லாம் நட்புறவு நல்லெண்ணம் தேசியம் பற்றி பாடம் நடத்துகிறார்கள். உண்மையில் பயங்கரவாதிகளை விட பயங்கரவாத அமைப்புகளை விட இது போன்ற அதிகார வெறியும் சுயநலமும் பிடித்த அரசியல்வாதிகளும் கட்சிகளும் தான் உண்மையில் பாரதத்தின் சாபக்கேடுகள் என்ற கசப்பான உண்மை புரியும்.


Share it if you like it