பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேடை பேச்சில் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சில அரசியல் தலைவர்கள் என்னை தாடி வைத்துக்கொண்டு பூச்சாண்டி என்றும் மாயாண்டி என்றும், ஊர் ஊராக லேகியம் விற்றுக்கொண்டு வருகிறார். இவ்வாறு கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் அதெற்கெல்லாம் நான் கவலைப்படுபவன் அல்ல. இதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். ஏனென்றால் பூச்சாண்டி என்றால் திருநீறை நெற்றியில் பூசக்கூடிய ஆண்டியை தான் பூச்சாண்டி என்று அழைப்பார்கள். திருநீறை பூசிக்கொண்டு ஆண்டியாக யாத்திரை நடத்தி கொண்டிருக்கிறோம். மாயாண்டி என்று சொன்னால் தென் தமிழக மக்களுடைய குலதெய்வம் (காவல் தெய்வம்) . இன்று தென் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு காவல் தெய்வமாக பிரதமர் மோடி இருக்கிறார். ஆகவே அந்த கட்சியினுடைய ஒரு தொண்டனாக மாயாண்டி என்று சொன்னால் அதையும் பெருமையாக எடுத்து கொள்கிறோம்.
இந்த யாத்திரையானது ஒரு கடுமையான யாத்திரை. இந்த யாத்திரையில் வாகனம் ஒட்டுகிறவர்கள் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி ஆட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த யாத்திரையின் நிறைவு பகுதியில் வந்து நிற்கிறோம். தற்போது ஒரு பெரிய படையோடு நிற்கிறோம். இந்த படையானது பணம் கொடுத்து வந்ததல்ல தானா சேர்ந்த படையாக நிற்கிறார்கள். புதிய இளைஞர்கள் என்னுடைய கனவுக்கும் திமுக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல நானும் உங்களோடு வரேன். பெண்கள் கைக்குழந்தையோடு வந்து இந்த குழந்தை வளர்ந்து பெரிதாகும்போது ஒரு வளர்ந்த நாட்டில் இருக்க வேண்டும் அதனால் நான் உங்களுடன் கட்சி பின்னால் வருகிறேன். இவ்வாறு வந்த படைதான் பாஜகவின் படை.