ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் அடாவடி பெண் டி.எஸ்.பி.,யை கதறவிட்டு அட்டூழியம் விடியல் ஆட்சியில் தொடரும் அவலம்..! 

ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் அடாவடி பெண் டி.எஸ்.பி.,யை கதறவிட்டு அட்டூழியம் விடியல் ஆட்சியில் தொடரும் அவலம்..! 

Share it if you like it

இன்னும் 5 மாதம் தான் உள்ளது. நாங்கள் பார்க்காத காவல்துறையா என்று அண்மையில் காவல் துறையின் உயர் அதிகாரியை காமெடி நடிகர் உதயநிதி ஸ்டாலின் பகீரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப தி.மு.க உடன்பிறப்புகள் காவல்துறை  அதிகாரியை பணி செய்ய விடாமல் அவர்களை மிரட்டும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அல்லா மீது சத்தியமாக நீ நாசமா போய்டுவ..! பாரு நீ என்ன ஆகப்போற பாரு என்று சபித்ததோடு, அமைச்சர் சேகர் பாபு கிட்ட பேசுறியா இங்க கூட்டிட்டு வரவா..? பாக்கறியா என்றெல்லாம் அண்மையில் அக் ஷர் அலி என்பவர் பெண் என்று கூட பார்க்காமல் காவல்துறை அதிகாரியை மிக கடுமையாக விமர்சனம் செய்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்.

மணல் கடத்திய திருச்சி, மணப்பாறை ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் ஆரோக்கிய சாமியின் டிப்பர் லாரிகள், ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்ய முயன்ற பெண் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டரை, நான்கு மணி நேரம் கதற வைத்து அடாவடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க நிர்வாகிகள் காவல்துறையினரிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்வதற்கு, மூல காரணமாக இருந்த உதயநிதியை உடனே கைது செய்து கொரில்லா சிறையில் அடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

 


Share it if you like it