அரியலூர் மாவட்டத்தில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பணிக்காக அஸ்திவாரத்தை தோண்டும் பொழுது வள்ளி தெய்வசேனா சமேத கற்சிலை கிடைத்துள்ளதாக இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த காசி விசுவநாதர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தை பல நூற்றாண்டு காலமாக புனரமைக்கப்படாமலும் வழிபாடு இல்லாமலும் இருந்து வந்த நிலையில் தற்போது கூவத்தூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பணிக்காக அஸ்திவாரத்தை தோண்டும் பொழுது வள்ளி தெய்வசேனா சமேத கற்சிலை கிடைத்துள்ளது
இந்த சிலையை ஆய்வு செய்ததில் பிற்கால பாண்டிய காலத்தில் வடிவமைக்கப்பட்ட முருகன் சிலையை ஒத்திருப்பதாக வரலாற்று பேராசிரியர்கள் கூறுகின்றனர். அரியலூர் பகுதியில் 14 ஆம் நூற்றாண்டு பிற்கால பாண்டியர் வம்சமானது சோழர்கள் கட்டிய கோவிலில் உள்ள கற்சிலைகளை தெய்வங்களாக வழிபட்டு வந்துள்ளனர். இப்படிப்பட்ட பழம்பெறும் 14 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஆவணப்படுத்தி வரலாற்றுப் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.