புதுடெல்லியில் உள்ள துவராகாவில் தசரா விழாவையொட்டி நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டார். அதில், ராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்தியர்களின் பொறுமையின் அடையாளமாகும். சாதிவெறி மற்றும் பிராந்தியவாதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளை எரிக்கும் நாளாகவும் இந்த நாளை குறிக்க வேண்டும். இன்று ராவணனை எரிப்பது வெறும் உருவ பொம்மையை எரிப்பதாக இருக்கக்கூடாது. சமூகத்தின் பரஸ்பர நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒவ்வொரு குறைபாடுகளையும் இது எரிக்க வேண்டும். இந்திய மண்ணில் ஆயுதங்கள் வணங்கப்படுவது எந்த நிலத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல, சொந்த நிலத்தை பாதுகாக்கவே என்று கூறினார். கீதையின் அறிவை நாங்கள் அறிவோம். மேலும், ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் தேஜாஸ் ஆகியவற்றை காட்டும் திறனையும் நாங்கள் பெற்றுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி விழா கூட்டத்தில் பேசியுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளை எரிக்கும் நாளாகவும் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி !
Share it if you like it
Share it if you like it