புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள லால் சௌக்கில், டிசம்பர் 31 இரவு, புத்தாண்டை மகிழ்ச்சியான மற்றும் கொண்டாட்டமான சூழ்நிலையில் வரவேற்க ஏராளமான மக்கள் கூடினர். ஸ்ரீநகர் முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனரும், ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அதர் அமீர் கான், இந்த நிகழ்வை இந்நகரம் இதுவரை கண்டிராத ஒன்று என்று விவரித்தார். ஜம்மு காஷ்மீர் இதுவரை கண்டிராத நகர வாழ்க்கை. கொண்டாட்டம், முன்னெப்போதும் இல்லாத விறுவிறுப்பு!” என்று அதர் அமீர் கான் தனது X பதிவில் கூறியுள்ளார்.
ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி (SMC) திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் ஸ்ரீநகர் நகரம் கண்டுள்ள மாற்றத்திற்கு இதுவே மிகப் பெரிய அலிபியாக இருக்கிறது. இதை செய்ததற்காக எனது ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் SMC குழுவை பற்றி நான் பெருமைப்படுகிறேன், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று நகராட்சி ஆணையர் கூறினார்.
எப்போது பார்த்தாலும் தீவிரவாத சண்டை வெடிகுண்டு சத்தம் என்று இருந்த ஜம்மு காஷ்மீரில் இன்று புத்தாண்டை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்த்தும் நிகழ்வாக பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முதன்மையான காரணம் பிரதமர் மோடிதான் என்றும் வரும் தேர்தலிலும் அவர்தான் பிரதமராக வர வேண்டும் என்று நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.