ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்புகள் தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக VHP எக்ஸ் பதிவில்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் வைஷ்ணவி தேவி கத்ராவிலிருந்து சிவகோடி சென்ற இந்து பக்தர்களின் பேருந்து மீது ஜூன் 9 அன்று கோழைத்தனமாக தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்களை பஜ்ரங்தள் மற்றும் VHP வன்மையாகக் கண்டிக்கிறது.
பயங்கரவாதிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மனுவை தமிழக கவர்னரிடம் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் திரு.கோ.ஸ்தாணுமாலயன் அளித்தார்.
கொல்லப்பட்ட ஹிந்து ஆன்மீக பக்தர்களின் ஆன்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் பிரார்த்தனை செய்வோம் அகில பாரத இணைச் செயலாளர் திரு.P.M.நாகராஜன்
மாநில செயலாளர் பால.மணிமாறன்அமைப்பு செயலாளர் சு.வெ.ராமன் ஊடகப் பொறுப்பாளர்
திரு கார்த்திகேயன் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.