90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (செப்.18) காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், அங்கு கடும் குளிர் நிலவுவதால், காலை 9 மணி நிலவரப்படி 11.11 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
இவ்வாறு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில், புல்வாமா மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகள், ஷோபியனில் 2, குல்காம் மாவட்டத்தில் 3, அனந்த்நாக் மாவட்டத்தில் 7, கிஷ்ட்வார் மாவட்டத்தில் 3, தோடாவில் 3 மற்றும் ராம்பன் மற்றும் பானிஹல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் 16 சட்டமன்றத் தொகுதிகள் காஷ்மீரிலும், 8 சட்டமன்றத் தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன.
இந்த முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது. இதனையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில், புல்வாமா மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகள், ஷோபியனில் 2, குல்காம் மாவட்டத்தில் 3, அனந்த்நாக் மாவட்டத்தில் 7, கிஷ்ட்வார் மாவட்டத்தில் 3, தோடாவில் 3 மற்றும் ராம்பன் மற்றும் பானிஹல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் 16 சட்டமன்றத் தொகுதிகள் காஷ்மீரிலும், 8 சட்டமன்றத் தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன.
இன்று நடைபெறும் வாக்குப்பதிவிற்காக 24 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.. இன்று நடைபெறும் வாக்குப்பதிவிற்காக 24 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.