2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ‘ஜூம்’ கவலைக்கிடம்!

2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ‘ஜூம்’ கவலைக்கிடம்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேசமயம், பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினருக்கு பேருதவியாக இருந்த ராணுவ நாய் ஜூம், துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் டாங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 9-ம் தேதி பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினருடன் `ஜூம்’ என்று அழைக்கப்படும் பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவ நாயும் சென்றிருந்தது. ஆனால், பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தனர். எனவே, ராணுவ நாய் ஜூமை, வீட்டிற்குள் அனுப்பினர். வீட்டிற்குள் புகுந்த ஜூம், பயங்கரவாதிகளை கண்டுபிடித்து, வெளியே விரட்டியது. அப்போது, பயங்கரவாதிகள் ஜூம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த நிலையிலும், பயங்கரவாதிகள் வீட்டை விட்டு வெளியே துரத்தியது ஜூம்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை எளிதில் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், பயங்கரவாதிகள் சுட்டதில் ஜூம் மீது 2 குண்டுகள் பாய்ந்தன. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த ஜூம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, ஏராளமானோர் ஜூம் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it