ஜப்பானும் இந்தியாவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சி !

ஜப்பானும் இந்தியாவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சி !

Share it if you like it

இந்திய இராணுவம் மற்றும் ஜப்பானின் தற்காப்பு படை இடையேயான 5வது ‘தர்மா கார்டியன்’ கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் பிப்ரவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பயிற்சியானது மார்ச் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தர்மா கார்டியன்’ பயிற்சி ஆண்டுதோறும் இந்தியா மற்றும் ஜப்பானில் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் தலா 40 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஜப்பானும் இந்தியாவும் கூட்டு இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளன.

இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்பின் ஒருபகுதியாக இந்த ராணுவப் பயிற்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை ஜப்பானில் நடைபெற்ற இந்த ஒத்திகைப் பயிற்சி இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் இந்திய இராணுவம் மற்றும் ஜப்பானின் தற்காப்பு படையினர் இணைந்து உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வின் ஒருபகுதியாக, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it