ஏசுபிரான் கூறிய நற்கருத்துக்களை மக்களிடம், கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைய நிலையோ படுமோசமாக உள்ளது. தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான கிறிஸ்தவ பாதிரியார்கள் தி.மு.க.வின் ஆசி பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. அமைதியை தேடி சபைகளுக்கு வரும் கிறிஸ்தவ மக்களிடம், பா.ஜ.க. குறித்து அவதூறு பரப்புவதே பல பாதிரியார்களின் தொழிலாக மாறியுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, அந்நிய நாட்டில் இருந்து வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு இங்குள்ள குடிமக்களை வாழும் நாட்டிற்கு எதிராக திசை திருப்புவதே மதமாற்றம். அப்பாவி மக்களின் மண்டையை கழுவி தங்களின் சுயநலத்திற்காக தூண்டி விடுவதே மதமாற்றம். பிரிவினை சக்திகளுக்கு துணை போவதே மதமாற்றம். இப்படியாக, மதமாற்றத்தின் தீமையை குறித்து சொல்லி கொண்டே போகலாம். இதுதவிர, மாற்று மதத்தில் உள்ள மக்களை நம்ப வைக்கும் விதமாக பல்வேறு உத்திகளை மதமாற்றும் பாதிரியார்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்தவகையில், காஞ்சன் மிட்டல் எனும் ஹிந்து பெண்மணிக்கு பேய் பிடித்து இருப்பது போலவும் இதற்கு, கிறிஸ்தவ பெண் மதபோதகர் ஒருவர் Zoom-ல் வந்து பேய் ஓட்டுவது போன்ற காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையில், தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சிறுவன் ஒருவனின் தொண்டையில் கை வைத்து தனது வாயால் ஊதி அவனது நோயை குணப்படுத்தி இருந்தார். இது, மருத்துவ துறைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என பாதிரியாரை பலமாக நெட்டிசன்கள் ஜெபித்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், ஐப்பான் நாட்டை சேர்ந்த பெண் பாதிரியார் ஒருவர் தமிழக கிறிஸ்தவ மிஷநரிகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகப்பெரிய நாடகம் ஒன்றினை நடத்தியிருக்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதன் லிங்க் இதோ.