தமிழக முதல்வர் ஸ்டாலின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு ஆலோசனை குழு ஒன்றினை அண்மையில் நியமனம் செய்து இருந்தார். அக்குழுவில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸை சேர்ந்த ஜீன் ட்ரெஸ், முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ். நாராயண் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இக்குழுவில் இடம் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நியமனம் செய்த குழுவில் இடம் பெற்று உள்ள இரண்டு பொருளாதார வல்லுனர்கள் குறித்து. தமிழகத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ள காணொளி ஒன்று, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீரமணி, நடிகர் மயில்சாமி, அருணன், போன்ற அறிவு ஜீவிகளால் போற்றப்பட்ட ஜெயரஞ்சனை நியமனம் செய்யாமல் புறக்கணித்த தமிழக முதல்வருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புதிய பொருளாதார ஆலோசகர்கள் திரு ரகுராம் ராஜன் மற்றும் திரு அரவிந்த் சுப்பிரமணியம் பற்றி, பழைய Vice Chairperson, State Development Policy Council, திரு ஜெயரஞ்சன் அவர்கள்
முட்டுமா?
மோதுமா?
வெடிக்குமா?
நடிக்குமா?
போகப்போக தெரியும்
முதலே முழுக்கோணல் pic.twitter.com/0nsPYIbF9W— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) June 22, 2021