ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடத்தப்பட்ட ஹிந்து சிறுமி பெங்களூருவில் மீட்கப்பட்டிருக்கிறார். அச்சிறுமியை கடத்திச் சென்று கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்த ஷாகித் அன்சாரி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் கெரேதாரி காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் ஒரு ஹிந்து குடும்பம் வசித்து வருகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் முக்தார் அன்சாரி மகன் ஷாகித் அன்சாரி. இவன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறான். இந்த சூழலில், ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை லவ்ஜிகாத் மூலம் காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான் ஷாகித் அன்சாரி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, மேற்கண்ட ஹிந்து குடும்பத்தினரின் வீட்டுக்கு வந்த முக்தார் அன்சாரி, அஞ்சுமான் முஸ்லீம் கமிட்டியின் மாவட்ட நிர்வாகி ஹபீப் மியான் மற்றும் சிலர், ஹிந்து குடும்பத்தினரை மதம் மாறும்படியும், அவர்களது மகள் 16 வயது சிறுமியை ஷாகித்துக்கு திருமணம் செய்து கொடுக்கும்படியும், இல்லாவிட்டால் அச்சிறுமியை கடத்திச் செல்வதாகவும் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால், இதற்கு ஹிந்து குடும்பத்தினர் மறுத்து விட்டார்கள்.
இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி ஹிந்து குடும்பத்தினர் வீட்டுக்கு 3 இரு சக்கர வாகனங்களில் வந்த ஷாகித் அன்சாரி, அவரது உறவினர் அர்பாஸ் அன்சாரி மற்றும் 4 பேர் அடங்கிய கும்பல், அச்சிறுமியை கடத்திச் சென்றது. மேலும், வீட்டிலிருந்த சுமார் 3.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், 25,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் அபகரித்துச் சென்றனர். இதுகுறித்து ஹிந்து குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். ஆனால், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதனால், ஹிந்து குடும்பத்தினர் ஹிந்து அமைப்புகளின் உதவியை நாடி இருக்கிறார்கள். இதையடுத்து, ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகே, போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், கடத்தப்பட்ட சிறுமியை தேடும் படலம் தொடங்கியது. ஆனால், சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், சிறுமி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு விரைந்த போலீஸார் சிறுமியை மீட்டு வந்தனர். பின்னர் நடந்த விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதாவது, ஹிந்து சிறுமியை கடத்திச் சென்ற இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல், அச்சிறுமியை வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்திருக்கிறது. பின்னர், அச்சிறுமியை ஷாகித் அன்சாரிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஷாகித் அன்சாரி, அர்பாஸ் அன்சாரி உள்ளிட்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.