ஹிந்துக்கள் மீது ஜிகாத் செய்ய வேண்டும் என பாலஸ்தீனிய மதகுரு ஆணவத்துடன் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, இஸ்லாமிய மதப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முகமது நபி பற்றிய கருத்தை மேற்காட்டி ஒரு ஊடக விவாதத்தில் பேசியிருந்தார். இதற்கு, நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், இஸ்லாமிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதனிடையே, நுபுர் ஷர்மா, கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு, இஸ்லாமிய நாடுகள் வரவேற்பு தெரிவித்து இருந்தன. ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தூண்டி விடுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜீன் – 10 தேதி அல்-அக்ஸா மசூதி பேரணியில் கலந்து கொண்ட பாலஸ்தீனிய இஸ்லாமிய அறிஞர் நிதால் சியாம் இஸ்லாமிய மக்களிடையே உரையாற்றும் பொழுது கூறியதாவது;
முகமது எல்லா மக்களுக்கும் எஜமானர். ஓ முஸ்லீம்களே, காஃபிர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு எதிராக அடுத்தடுத்து அவமானப்படுத்தும் விரோதப் போக்கை பார்த்தீர்களா? பிரான்ஸின் அவமானங்களை நாம் தாங்கிக் கொண்டோம். இந்த அவமானங்கள் முஸ்லீம்களுக்கு எதிரான போரை விட குறைந்தவை அல்ல காஃபிர்கள் மாறி மாறி முஸ்லிம்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துகிறார்கள். முதலில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இருந்தது. பின்னர் ஸ்வீடன் முஸ்லீம் குழந்தைகளைக் கடத்தியது. பிரான்ஸ் ஒருமுறை தாக்கியது. ரஷ்யர்கள் பலமுறை தாக்கினார்கள் அதன் பின் சீனா. பசுவை வழிபடும் ஹிந்துக்கள் இப்போது மனிதகுலத்தின் எஜமானரை அவதூறு செய்கிறார்கள்.
பாகிஸ்தானியர்களே ஹிந்துக்களுடன் போரிடுவதில் மற்றவர்களை விட உங்களுக்குப் பெரிய கடமை இருக்கிறது. அவர்கள், உங்கள் எல்லையில் இருக்கிறார்கள், உங்கள் நிலத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, உங்கள் மக்களைக் கொன்று விடுகிறார்கள். இந்துக்களை ஒழுங்குபடுத்தும் வல்லமை வாய்ந்த ஒரு பெரிய படை உங்களிடம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.