கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை காணவில்லை என்ற போஸ்டர் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் சார்பில், கரூர் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு படுதோல்வியை தழுவியவர் ஜோதிமணி. இதையடுத்து, மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை கட்சி மேலிடம் இவருக்கு வழங்கியது. அந்த வகையில், கடந்த 2019 – ஆம் ஆண்டு நடைபெற்ற எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வென்றார். கரூர் மக்கள் இவர் மீது இரக்கப்பட்டு தான் வெற்றி பெற செய்தனர் என்று சொல்லப்படுகிறது. மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என்று பல தரப்பு மக்களும் எம்.பி.யின் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
தன்னை இரண்டு முறை தோற்கடித்த கரூர் மக்களை பழிவாங்க வேண்டும் என்று ஜோதிமணி கருதுகிறாரா? என்பதே பலரின் கருத்தாக உள்ளது. அரவக்குறிச்சியை தவிர மற்ற ஜந்து சட்டசபை தொகுதிகளில் எம்.பி.க்கு அலுவலகம் கூட இல்லை என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், கரூரை சேர்ந்த, தமிழ் ராஜேந்திரன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி. ஜோதிமணிக்கு திறந்த மடல் ஒன்றினை எழுதி இருந்தார். அதன் பதிவு இதோ.
இப்படிப்பட்ட சூழலில், கரூர் எம்.பி.யை காணவில்லை என்ற போஸ்டர் கரூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த போஸ்டரின் பயோடேட்டா இதோ.
பெயர்: ஜோதிமணி
வயது: 47
பிடித்த இடம்: போலீஸ் வேன், நாடாளுமன்ற கேண்டீன்
படிப்பு: வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம் செய்வது எப்படி
பிடித்த பொழுதுபோக்கு: கலெக்டர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது, காளாண் பிரியாணி சமைப்பது.
பிடித்த வார்த்தைகள்: அண்டோனியா மைனோ, ராவுல் வின்சி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா
பிடிக்காத வார்த்தைகள்: தொகுதி நலன், மக்கள், வாக்குறுதி, ராமர்கோவில்
பிடித்த நாடு: இத்தாலி
மறந்தது: தான் கரூர் தொகுதி எம்.பி. என்பதை
காணாமல் போன தினம்: 23 மே 2019 (கரூர் எம்.பி.யாக பதவியேற்ற பின்பு)
நாடாளுமன்ற கேண்டீனில் சலுகை விலை பஜ்ஜி, போண்டா சாப்பிட்டதை தவிர, இவரால் தொகுதிக்கு எந்தவித பயனும் இல்லை. கண்டா வர சொல்லுங்க, கையோடு கூட்டி வாருங்க என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. அதேபோல, தி.மு.க.வை சேர்ந்த பல எம்.பி.களையும் காணவில்லை என்ற போஸ்டர் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.