நடிகர் கமல்ஹாசன் உரையை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மொழி பெயர்ப்பு செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு (கேரளா) எம்.பி.யாக இருப்பவர் ராகுல்காந்தி. இவர், ’பாரத் ஜோடோ யாத்திரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) எனும் பெயரில் நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இந்த, பயணம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி, காஷ்மீரில் நிறைவு பெறும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார். இவர், நடைப்பயணத்தில், பல்வேறு நகைச்சுவை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
ஒரு மாநிலத்தில் ராகுல் காந்தி கால் வைக்கும் முன்பே அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொள்கின்றனர். இப்படியாக, அவர் கால் வைக்கும் மாநிலங்களில் எல்லாம் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கண்ணி வெடி வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே, பாரத் ஜோடா யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசும் வண்ணம் மிகப்பெரிய கூட்டத்தை அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டி இருந்தனர். இதையடுத்து, தேசிய கீதத்தை ஒலிக்க செய்யுங்கள் என தனது கட்சி நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டார். இதையடுத்து, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
இதில், கொடுமை என்னவென்றால், இந்திய தேசிய கீதத்திற்கு பதில் நேபாள் நாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டுள்ளது. நேபாள் நாட்டு தேசிய கீதம் எது? இந்திய தேசிய கீதம் எது? என்று கூட தெரியாத தற்குறிகளை வைத்து இருக்கும் நான் எவ்வளவு பெரிய தற்குறி என்று தன்னை தானே திட்டி கொண்டு இருப்பார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்றைய தினம் ராகுல்காந்தி தனது நடை பயணத்தை மேற்கொண்டார். அந்த, பேரணியில் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி கேட்டு கொண்டதற்கு இணங்க, நடிகர் கமல் தமிழில் பேசினார். இதனை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கரூர் எம்.பி.யுமான ஜோதிமணி ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்தார். இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேசினார். அதனை, கூட ஜோதிமணி ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்த சம்பவம்தான் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.