கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வழக்கம் போல பொய் பேசி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜோதிமணி. இவர், மத்திய அரசு மற்றும் பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்புவதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டவர். உ.பி. குஜராத், மத்திய பிரதேசம் என பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் எங்கேனும் சிறு தவறு நடந்தால், உண்மை வெளிவரும் முன்பே பா.ஜ.க மீது வீண் பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட கூடியவர் இவர் என்பதை தமிழகம் நன்கு அறியும். அதேவேளையில், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவது மற்றும் பள்ளி மாணவிகள் தற்கொலை, பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து இன்று வரை வாய் திறக்காமல் வழக்கம் போல கப்சிப்.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பேனர்ஜியின் கார் விபத்தினை சந்தித்தது. இந்த விபத்தில் முதல்வரின் கால் காயம் அடைந்தது. இதற்கு, பா.ஜ.க தான் காரணம் என்று அபாண்டமான பழியினை மேற்குவங்க முதல்வர் கூறியிருந்தார். இதையடுத்து, உண்மை வெளிவருவதற்கு முன்பே, மம்தா பானர்ஜி போன்ற ஒரு வலிமை வாய்ந்த முதலமைச்சரையே பி.ஜே.பி இப்படி தாக்குமென்றால். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் சாதாரண மக்களின் கதி என்ன? என்று தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மம்தாவின் திட்டமிட்ட கபட நாடகத்திற்கு அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால், அது பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், பா.ஜ.க மீது வீண்பழியை சுமத்தி இருந்தார். அதே போல, போராடுகிற விவசாயிகள் நல்ல உடை அணிந்திருப்பது, உணவு உண்பது, கார் வைத்திருப்பது பி.ஜே.பி.யினர் கண்களை உறுத்துகிறது. டீ விற்ற ஒருவர் பிரதமரானதும் இறக்குமதி காளான் அருந்தி, 10-லட்சதிற்கு உடை அணிந்து, ரூ8500 கோடி தனிவிமானத்தில் பறக்கும்போது விவசாயி தனது உழைப்பில் ஓரளவு வசதியாக வாழ்வது குற்றமா? என உண்மைக்கு புறம்பாக பேசியவர் இதே ஜோதிமணி.
இப்படியாக, தனது மனம் போன போக்கில் பச்சையாக பொய் பேசுவது, பாரதப் பிரதமர் மோதி மீது சேற்றை வாரி இறைப்பதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபத்தை தமிழக மக்கள் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ்விற்கு அளித்த பேட்டியில் இவர் கூறியதாவது; நான் தமிழகத்தை சேர்ந்தவள், ராமர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் தமிழகத்தில் யாரை கேட்டாலும் ராமர் கோவிலை பற்றி தெரியாது என்று தான் கூறுவார்கள், என வழக்கம் போல இவர் பச்சையாக பொய் பேசி இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமாயணத்தோடு தொடர்புடைய எவ்வளவு ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.