இந்திய பத்திரிக்கைக் கவுன்சில் ஒரு தார்மீக கண்காணிப்புக் குழுவாக செயல்படத் தொடங்கிய நாள் நவம்பர் 16. உலகெங்கிலும் பல பத்திரிகைகள் அல்லது ஊடக கவுன்சில்கள் இருந்தாலும், இந்திய பத்திரிக்கை கவுன்சில் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கடமையில் அதிகாரம் செலுத்தும் அமைப்பு ஆகும். பத்திரிகைத் துறையில் தொழில்முறை நெறிமுறைகளைப் பேணுவதற்கான சட்டரீதியான அதிகாரம் கொண்ட நோக்கத்திற்காக இந்திய பத்திரிகை கவுன்சில் 16 நவம்பர் 1966 நிறுவப்பட்டது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தேசியபத்திரிகைதினத்தில் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள். வலுவான, வளமான குடிமக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தை கட்டியெழுப்ப சுதந்திரமான மற்றும் நியாயமான ஊடகம் முக்கியமானது. அந்த பெரும் எதிர்பார்ப்புடன் ஊடகவியலாளர்களை தேசம் எதிர்நோக்குகிறது.இவ்வாறு சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.