தி.மு.க.விற்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வெறும் நாடகமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் தி.மு.க.வின் ஆசி பெற்றவை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனை மெய்ப்பிக்கு விதமாக, ஒரு சில ஊடகங்களை தவிர்த்து அனைத்து ஊடகங்களும் விடியல் ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள் குறித்து பேசுவதில்லை என்பதன் மூலம் இவர்களின் உண்மையான ஊடக தர்மத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும். மேலும், பா.ஜ.க, பாரதப் பிதமர் மோடி மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பற்றி ஒரு தவறான எண்ணத்தை, தமிழக ஊடகங்கள் செய்து வருகின்றன என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர்.
இப்படிப்பட்ட சூழலில், சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயரைச் சேர்ந்த நிர்வாகி புருஷோத்தம் குமார் என்பவர் ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் மீது சென்னை மயிலாப்பூர் இ – 1 காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுதவிர, கெவின் என்பவர் எங்களிடம் 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார் என அப்புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, கெவின் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம், பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இதனை தொடர்ந்து, சென்னை நகரக் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், பத்திரிகையாளர் சங்கங்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், சவுக்கு சங்கர், பத்திரிக்கையாளர் மணி, சபீர், லட்சுமி சுப்ரமணியன் மற்றும் கார்டூனிஸ்ட் பாலா ஆகியோர் போராட்டம் நடத்தினர்.
அந்தவகையில், பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் இப்போராட்டம் குறித்து கூறியதாவது; இந்த போராட்டம் எனக்காக நடத்தப்பட்டது அல்ல, கருத்து சுதந்திரத்திற்காக அல்ல, பத்திரிக்கை தர்மத்தை காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்டது அல்ல, முதலில் எனக்கு அப்படி தோன்றவும் இல்லை. இந்த எப்.ஐ.ஆரில் ஜீனியர் விகடன் பெயர் இல்லாமல் மாரிதாஸ் பெயர் மட்டும் இருந்திருந்தால். இங்கு கதையே வேற, இதனை இவர்கள் கொண்டாடி இருப்பார்கள். கெவினையும் என்னையும் இணைத்து பெரிய செய்தியாகவே வெளியிட்டு இருப்பார்கள். இந்த போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை கண்டிக்கிறோம் என்று ஒரு வார்த்தையாவது இவர்கள் சொன்னார்களா? அந்த போராட்டத்தில் என்ன சொன்னார்கள் இது கவன ஈர்ப்பு போராட்டமாம். இதுவே அ.தி.மு.க அரசு என்றால் பா.ஜ.க அடிமை எடப்பாடிக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் ஒன்று கூடினார்கள் என இவர்கள் செய்தி வெளியிட்டு இருப்பார்கள் என்று காட்டமாக அவர் பேசியுள்ளார்.