அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் தலைநகராக உள்ள புது டெல்லியில் அமைந்துள்ள 100 வருடங்களுக்கு மேல் பழமையாக உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் இந்திய பாராளுமன்றம் ஆகியவற்றை புதுமைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த திட்டத்திற்கு சென்ட்ரல் விஸ்டா என்று பெயர் இடப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் கட்டிடங்களுக்கு மத்திய அரசு வருடம் தோறும் செலுத்தி வரும் வாடகை தொகை ஆயிரம் கோடி மிச்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி மேலும் பல திட்டங்கள், நன்மைகள், நாட்டு மக்களுக்கு கிடைக்கும் என்பதோடு மட்டுமில்லாமல் பல வழிகளில் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பது நிதர்சனம்.
நாட்டிற்கு நன்மை ஏற்படும் என்றால் உண்மையிலேயே சிலருக்கு பொறுக்காது என்பது நாம் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்பு பிரிவினை சக்திகள், போலி அரசியல்வாதிகள், போலி நடுநிலையாளர்கள், எதிர்க்கட்சிகள், என்று பலர் பொய், புரளிகளை சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதிராக பரப்பி வந்தனர்.
அதனை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக ஒருவர் வழக்கு தொடுத்து இருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி D.N. பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் இருவரும் இந்த திட்டம் நாட்டிற்கு மிகவும் அவசியமானது மற்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அரசியல் காரணத்திற்காக இந்த வழக்கை தொடர்ந்தவர் மீது 1 லட்சம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதிபதிகளின் தீர்ப்பை அடுத்து பொய் பரப்பிய போராளிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.