வாடிகன் கிறிஸ்தவர்களுக்கு புனித யாத்திரை தலமாக இருப்பதுபோல், இந்துக்களுக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோவில் இருக்கும் !

வாடிகன் கிறிஸ்தவர்களுக்கு புனித யாத்திரை தலமாக இருப்பதுபோல், இந்துக்களுக்கு அயோத்தி ஸ்ரீராமர் கோவில் இருக்கும் !

Share it if you like it

நடிகை கங்கனா ரனாவத் தான் நடித்து முடித்த தேஜாஸ் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இன்று ஸ்ரீ ராமரை தரிசிக்க அயோத்தி சென்றுள்ளார். ராம ஜென்மபூமி எங்கள் திரைப்படத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என்று சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அயோத்தியில், நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில், இறுதியாக ராம் லல்லா கோவில் கட்டப்பட்டது. இது இந்துக்களின் நூற்றாண்டு கால போராட்டமாகும், இதை எங்கள் தலைமுறையினர் இன்று பார்க்க முடிகிறது. நான் அயோத்தியில் ஒரு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன் மற்றும் ஆராய்ச்சியும் செய்துள்ளேன் இது 600 ஆண்டு கால போராட்டம், மோடி அரசு மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் இந்த நாள் சாத்தியமாகிறது. வாடிகன் கிறிஸ்தவர்களுக்கான மிகப்பெரிய புனித யாத்திரை தலமாக இருப்பதுபோல், ஹிந்துக்களுக்கு நாடு மற்றும் சனாதன கலாச்சாரத்தின் மாபெரும் அடையாளமாக அயோத்தி கோவில் உலகிற்கு முன் இருக்கும்… நமது தேஜஸ் திரைப்படத்தில் ராமர் கோவிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.


Share it if you like it