தமிழ்நாட்டில் ஹிந்தி ஓழிக கோஷம்: டெல்லியில் ஹிந்தியில் கோஷம்!

தமிழ்நாட்டில் ஹிந்தி ஓழிக கோஷம்: டெல்லியில் ஹிந்தியில் கோஷம்!

Share it if you like it

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்பு ராகுல் காந்தி ஆஜர் ஆனார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கரூர் எம்.பி ஜோதிமணி ஹிந்தி மொழியில் கோஷம் எழுப்பிய நெட்டிசன்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டி பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேரணியாக சென்று இருந்தார். அந்தவகையில், ராகுல் காந்திக்கு ஆதரவு வழங்கும் வகையிலும், பா.ஜ.க.விற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிமணி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, ஹிந்தி மொழியில் கோஷம் எழுப்பிய சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹிந்தியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இன்று ராகுல் காந்திக்காக டெல்லியில் ஹிந்தி மொழியில் கோஷம் எழுப்புவது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மறைந்த வசந்தகுமாரின் மகனும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் விஜய்வசந்த். இவர், டெல்லியில் உள்ள காவல்துறை வாகனத்தில் ஏறி நின்று கொண்டு போஸ் கொடுக்குமாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகிறார். இக்காணொளி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it