கழிவு நீரை அகற்றாமல் அதற்குள்ளேயே காங்கிரெட்டை கொட்டி காண்ட்ராக்டர்கள் செய்து வரும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது.
பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. விடியல் கிடைக்கும் என்று நம்பிய மக்கள் அதன் பலனை தற்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அனுபவித்து வருகின்றனர். இதுதவிர, மக்களின் அடிப்படைவசதிகள் பெரும்பாலும் சரியாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதனிடையே, வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து, பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனகங்கள், அடிபம்பு என கண்ணில் பட்ட அனைத்து இடத்திலும் சிமெண்டினை கொட்டி அட்டூழியம் செய்து இருந்தனர். இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1 -வது வார்டு கே.கே. நகர். இந்த, வார்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, கால்வாயில் இருந்த அசுத்த நீரை அகற்றாமல் அதன் மீதே சிமெண்டினை கொட்டி அவசர கதியில் அப்பணியினை முடித்து இருந்தனர். இப்படியாக, பல்வேறு மக்கள் நலப்பணி திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தான், சேலம் மாவட்டத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று இருக்கிறது. அப்போது, கரூரில் என்ன வழிமுறைகள் பின்பற்றபட்டதோ? அதேவழிமுறை சேலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. விடியல் ஆட்சியில், இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, எல்லாம் பேசாமல் அந்த துறையை சேரந்த அமைச்சர் கே.என். நேரு எங்கே? பதுங்கி இருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.