காசி தமிழ் சங்கமம் திருவிழாவிற்கு மிக முக்கிய காரணம் தி.மு.க. அரசுதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை பறைச்சாற்றும் விதமாக மோடி அரசு தொடங்கி வைத்த நிகழ்ச்சிதான் காசி சங்கமம். கடந்த சில நாட்களுக்கு முன்பு உ.பி. மாநிலத்தில் உள்ள காசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்த அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார் ; “காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடர்புகளை நினைத்து போற்றும் வகையில், காசி தமிழ் சங்கமம் திருவிழா நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில், தமிழ் மொழியின் மாண்புகளை, பாரம்பரிய பெருமைகளை, கலாசார அருமைகளை விளக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு ஓர் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. பாரதியாரின் உணர்வுப்பூர்வமான வரிகளுக்கு உயிரூட்டும் வகையில், இந்த இனிமையான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்மொழியின் பாரம்பரிய கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி போன்ற 12 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் சுமார் 2,500 பேர் காசிக்கு ரயில் மூலம் சிறப்பு விருந்தினராக அழைத்துச் செல்லப்பட்டனர். பா.ஜ.க.வின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்புகளிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
தமிழ் மொழியை பா.ஜ.க. கொண்டாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்நிகழ்ச்சி, பா.ஜ.க.வை சார்ந்தது அல்ல. 2,000 மாணவர்களும் காசி சென்று வருவதற்கான செலவினை தமிழக அரசும், ஹிந்து அறநிலையத்துறை மட்டுமே செய்தது. இதற்கான, முழு உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. இதில், பா.ஜ.க.விற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதுதான், நகைச்சுவையின் உச்சம் என நெட்டிசன்கள் கூறியிருக்கின்றனர்.