கே.எஸ். அழகிரி கொடுத்த விளக்கம்: குழம்பிய பொதுமக்கள்!

கே.எஸ். அழகிரி கொடுத்த விளக்கம்: குழம்பிய பொதுமக்கள்!

Share it if you like it

தமிழக முதல்வரிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி பதில் அளித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், ஜனவரி  5- ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2,500 திருக்கோயில்களுக்கு, 30 கோடி ரூபாய் நிதி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த, விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்கிறார்கள். நாங்கள் மதவாதத்திற்குதான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. மதம் – ஜாதி வேற்றுமை மட்டுமல்ல, கோயில் – சாமி வேற்றுமையும் திராவிட மாடல் அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழக முதல்வரின் கருத்தை தொடர்ந்து, பா.ஜ.க. மூத்த தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், மதங்களுக்கு எதிரி இல்லை’ என்று கூறும் முதலமைச்சர் இனி இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது, அவர் கூறியதாவது ;

பா.ஜ.க. ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறது. ஹிந்துக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறுவாரா? என்று கேட்டு இருக்கிறார்கள். நான், கூறுவது என்னவென்றால், தமிழர் திருநாள் என்று சொல்ல கூடிய பொங்கள் ஹிந்து பண்டிகை தானே. ஹிந்து பண்டிகையான பொங்கலுக்கு முதல்வர் வாழ்த்து சொல்கிறாரே? அது ஹிந்து பண்டிகையில்லையா? அது என்ன வெளிநாட்டில் இருந்து வந்த பண்டிகையா? என பத்திரிகையாளர்களே கடும் அதிர்ச்சியடையும் வகையில் அற்புதமான பதிலை கொடுத்து இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it