மகாத்மா காந்தி அம்பேத்கருக்கு வில்லனாக இருந்தவர் என வி.சி.க தலைவர் சர்ச்சை கருத்து. மெளனம் காக்கும் கே.எஸ். அழகிரிக்கு குவியும் கண்டனம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் சேவா சமிதி ஏற்பாடு செய்து இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்று இருந்தார். இந்நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவண்ணா மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேசிய வி.சி.க தலைவர் ”இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கர். அவரே தேசத் தந்தை. எப்போதும் அவர் தான் இந்தியாவின் ஹீரோ என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், அவர் கூறியதாவது; அந்த காலத்தில், அவருக்கு வில்லனாக இருந்தவர் காந்தி. இன்று வில்லனாக இருப்பவர் பிரதமர் மோடி,” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தனது பேச்சிற்கு பாராட்டுக்கள் குவியும் என்று நினைத்த திருமாவிற்கு கண்டனங்களும், எதிர்ப்புகள் மட்டுமே குவிந்தன. இதையடுத்து, மேடையில் இருந்து திருமாவை உடனே அப்புறப்படுத்துங்கள் என காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். நிலைமை கைமீறி போனதால் விழா ஏற்பாட்டாளர்கள் அவசர அவசரமாக திருமாவை மேடையில் இருந்து இறக்கி பாதுகாப்பாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேடையில் இருந்த பட்டியல் சமூக தலைவர்கள் திருமாவளவன் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த சம்பவம் தான் இதில் ஹைலைட். இதனிடையே, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பட்டபத் ஸ்ரீனிவாசன் என்பவர் மிஸ்டர் திருமாவளவன் பாரதப் பிரதமர் மோடி வில்லன் இல்லை… அவர் இந்திய நாட்டின் ஹீரோ என்று குறிப்பிட்டு இருந்தார். மகாத்மா காந்தியை வில்லன் என்று கூறிய திருமாவிற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதற்கு, தமிழக காங்கிரஸ் மற்றும் டெல்லி தலைமை இன்று வரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூட்டணி தர்மபடி திருமாவை கண்டிக்காமல் மெளனம் காப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். .
தெருமாமானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாத தெரு பொறுக்கி