அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவி இருந்தது. இதன்காரணமாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை கடும் மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். மேலும், அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் காங்கிரஸை விட்டே ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளனர். இதனால், காங்கிரஸ் இந்தியாவில் இருந்தே மறைவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
அந்த வகையில், மூழ்கி கொண்டு இருக்கும் கட்சியை எப்படியாவது? காப்பாற்ற வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, `பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை நடைபயணம்) எனும் யாத்திரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கி இருக்கிறார். இந்த யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல ராகுல் காந்தி இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறார்.
இதனிடையே, தமிழ்நாடு கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டு இருக்கும் அறிக்கை அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கே.எஸ். அழகிரி அறிக்கை இதோ.
தற்போது, காங்கிரஸ் 23 -ஆம் புலிகேசி போன்று பலவீனமாக உள்ளது. நம்மிடம் வாளும் இல்லை, படையும் இல்லை. கூட்டணியில் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி. சீட் பெற்று விடலாம் என கற்பனையில் வாழாமல் இனியாவது கொள்கை அடிப்படையில் வாழ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
கட்சியின் பலவீனத்தை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திய கே.எஸ். அழகிரியை வைத்து கொண்டு ராகுல் காந்தியால் எப்படி? பிரதமராக முடியும். எனவே, அவரை கட்சியை விட்டு உடனே நீக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.