டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மிகப் பெரிய நிம்மதியை வழங்கியவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்தியாவே நீரஜ் சோப்ரா-வை தலையில் வைத்து கொண்டாடி வரும் இவ்வேளையில் பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே ஹான் கூறியதாக இந்த ஆண்டு ஜீன் 21-ம் தேதி ஆங்கில நாளேடு ஒன்றில் வந்த கட்டுரையின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பான தனது அழுக்கு எண்ணத்தை கலைஞர் ஊடகம் செய்தியை வெளியிட்டு உள்ளது.
“இந்திய விளையாட்டு ஆணையம் (SAI), தடகள சம்மேளனம் (AFI) தங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை என்று கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த போது இந்திய விளையாட்டுத்துறை மீது உவே ஹான் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை கூறியதாகவும்.
ஒலிம்பிக்கிற்கான பயிற்சி குறித்து எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. எனவும் விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவையும் கொடுக்கவில்லை. தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்திய அதிகாரிகள் தம்மை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்ததாக கலைஞர் ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கில நாளிதழில் இந்த கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே முற்றிலும் மறுத்துள்ளார் நீரஜ் சோப்ரா. இந்திய அரசாங்கம் தனக்கு செய்த உதவிகளை பட்டியல் இட்டது மட்டுமில்லாமல் பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
மற்றொரு தகவல் என்னவென்றால் 2019-ஆம் ஆண்டு தோஹா-வில் நடைபெற்ற World Athletics Championship போட்டியில் பங்கேற்க நீரஜ் சோப்ரா தேர்வு பெறும் வாய்ப்பை தவற விட்டதால் அப்பொழுது அவருக்கு பயிற்சியாளராக இருந்த உவே ஹானின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அன்று முதல் ஜெர்மனியை சேர்ந்த KLAUS BARTONIETZ எனும் பயோமெக்கானிக் நிபுணர், நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சி அளித்து வருகிறார். அதுமட்டுமின்றி கோடி கணக்கான ரூபாயை நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்காக மத்திய அரசு செலவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமான பல தகவல்கள் வெளி வந்துள்ளது.
ஆக தனது உதவியின்றி இந்தியா தங்க பதக்கம் வென்றுள்ளதை உவே ஹான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதை புரிந்து இதன் மூலம் கொள்ள முடிகிறது. ஆனால் சொந்த நாட்டு வீரர் தங்க பதக்கம் வென்றுள்ளதை, தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகமான கலைஞர் தொலைக்காட்சி சகித்துக் கொள்ள முடியாமல் பொய் செய்தியை ஏன்? வெளியிட வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.