காளிகாம்பாள் கோயில் இந்து சமய அறநிலையதுறை வசம் வந்தது?

காளிகாம்பாள் கோயில் இந்து சமய அறநிலையதுறை வசம் வந்தது?

Share it if you like it

சென்னை பாரிமுனை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த காளிகாம்பாள் கோயிலை விஸ்வகர்மா சனாதன தர்ம என்ற தனியார் அமைப்பு பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்தது. கோயில் நிர்வாக சீரமைப்புக் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்காக கோயிலுக்கு புதிய தக்காரை அறநிலைய துறை நியமனம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது தர்கார் நியமனத்திற்கு விளக்கும் கேட்டு போராட்டக்கார்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.


Share it if you like it