விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு.. மத்திய அரசு புதிய வேளாண் மசோதாவை கொண்டு வந்தது.. காசு ஊடகங்கள், மற்றும் தி.மு.க, வி.சி.க, சீமான், சில்லறை போராளிகள், நடிகர் கமல் உட்பட பலரும் வேளாண் சட்டம் குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்து தவறான கருத்தினை இன்று வரை முன் வைத்து வருகின்றனர்…
போலி விவசாயி, ஆடிகார் என்று அழைக்கப்படும் அய்யாக் கண்ணு.. அண்மையில் புதிய வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இளைஞர்கள் தங்களின் ஆண்மையை இழப்பார்கள் என்று புதிய குபீர் தகவல் கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது…
இது போதாது என்று ம.நீ.ம. தலைவரும் நடிகருமான கமல் புதிய வேளாண் சட்டம் குறித்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார்… புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ம.நீ.ம பொதுச் செயலாளர் அருணாச்சலம் அக்கட்சியில் இருந்து விலகி இன்று தன்னை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டுள்ளார்..
அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்…
- புதிய வேளாண் சட்டங்களை தொலைநோக்குடன் மத்திய அரசு கொண்டு வந்ததது அதனை ஆதரிக்குமாறு கூறினேன்…
- வேளாண் சட்டங்களை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க.வின் மினியேச்சர் போல மக்கள் நீதி மய்யம் ஆகி விடக்கூடாது என்று வலியுறுத்தினேன்
- என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள கமல் மறுத்ததால் ம.நீ.ம கட்சியில் இருந்து விலகி விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்..
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அக்கட்சியிலிருந்து விலகி, சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் திரு.@PrakashJavdekar மாநில தலைவர் Dr.@Murugan_TNBJP மற்றும் @ReddySudhakar21 முன்னிலையில் கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
உடன் @KaruNagarajan1#JoinsBJP pic.twitter.com/l7g4PRIXIQ— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 25, 2020