கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு இதற்கு எதிராக எந்த அறிக்கையும் மற்றும் நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தலுக்கு வருவதற்கு முன்னால் கொடுத்த வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றிவிட்டது என்று வாயாலே வடை சுடுகிறார். மேலும் தனது கூட்டணி கட்சியான கர்நாடகா அரசுக்கு எதிராக அறிக்கை விட்டால் கூட்டணி முறிந்து தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சி தற்போதுவரை மௌனம் காத்து வருகிறார்.
மறுபக்கம் தான் முதலமைச்சர் ஆனால் தமிழகத்தை மாற்றிவிடுவேன் என்று பேசிவிட்டு தற்போது காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுக்காமல் பிக்பாஸ் சீசன் 7 ஐ நடத்தி தன்னுடைய கல்லா நிரம்பினால் போதுமென்று சுயநலமாக நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை புரமோஷன் செய்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில் ஸ்டாலின் அரசும் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் சுயநலமாக ஆட்சியில் நிலைக்க வேண்டும் என்றும், கோடி கோடியாக பணம் சம்பாதித்தால் மட்டும் போதும் என்று நினைப்பவர்களை இனிமேல் மக்கள் எப்படி ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் குமுறல்களை பதிவிட்டு வருகின்றனர்.