கல்விக் கண் திறந்த காமராஜர் குறித்து அவதூறு பரப்பிய டாக்டர். காந்தராஜ்-க்கு குவியும் கண்டனங்கள்.
தி.மு.க மற்றும் திராவிடர் முன்னேற்ற கழகத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர் டாக்டர். காந்தராஜ். இவர், ஹிந்து மதம், பாரதப் பிரதமர் மோடி மற்றும் ஹிந்து பண்டிகைகளுக்கு எதிராக தொடர்ந்து தனது வன்மம் நிறைந்த கருத்துக்களை முன் வைக்க கூடியவர். அந்தவகையில், பிரபல இணையதள ஊடகமான ஆதன் ஊடகத்தில் அளித்த நேர்காணலில் கல்வி கண் திறந்த காமராஜர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாவது.
காமராஜர் எளிமை பேசப்படும் அளவிற்கு அண்ணாவின் எளிமை ஏன்? பேசப்படவில்லையே இதற்கு என்ன காரணம் என நெறியாளர் கேட்கிறார். இதற்கு, அன்றைக்கு இருந்த ஊடகங்கள் பிராமணர்கள் கையில் இருந்தது. பிராமணர்களுக்காகவே வாழ்ந்தவர் காமராஜர். அவர், காலத்தில் தானே சிம்சன், ஈசன் குரூப், டிவிஎஸ், எஸ்.ஆர்.வி.எஸ், இந்தியா சிமெண்ட், சேஷா சாயி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் எல்லாம் பார்பனர்கள். ஆர்.வெங்கட்ரமணன் என்பவரிடம் தொழில்நலத்துறை அமைச்சர் பதவி கொடுத்தார். அவர் தனது ஜாதிகாரர்களை எல்லாரையும் தூக்கி விட்டார். காமராஜர் ஆட்சி காலத்தில் பிராமணன் பூரா தொழில் அதிபராக மாறினான். அதன் காரணமாகவே காமராஜரை எளிமையின் சின்னமாக அவர்கள் காண்பித்தார்கள். காமராஜர் நினைவு இடமாக இருக்கும் இடம் இன்று 250 கோடியோ அல்லது 300 கோடியோ அவர் எளிமையான மனிதரா. அன்று அவர் வைத்து இருந்த ஸ்டுடிபேக்கர் கார் என்ன விலை அன்று வைத்து இருந்த விலை உயர்ந்த கார்களில் ஒன்னு. அந்த திருமலை பிள்ளை ரோட்டில் இருக்கும் வீட்டை யார் கொடுத்தது டி.வி.எஸ் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களால் எளிமையின் சிகரம் என்று அழைக்கப்படும் காமராஜரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் டாக்டர். காந்தராஜ் பேசிய இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜரை தங்களது ரோல் மாடலாக கொண்டு வளரும் இளைய தலைமுறைகளுக்கு காந்தராஜின் கருத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இவரின் இக்கருத்திற்கு காமராஜரை குருவாக கொண்டுள்ள காங்கிரஸை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெருந்தலைவர் காமராஜரை லூசுப்பய என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் லிங்க் இதோ.