கோயில் இடத்தில் கார் பார்க்கிங்: தட்டிக்கேட்ட அர்ச்சகர் மீது கொடூர தாக்குதல்; தி.மு.க. குண்டர்கள் அராஜகம்!

கோயில் இடத்தில் கார் பார்க்கிங்: தட்டிக்கேட்ட அர்ச்சகர் மீது கொடூர தாக்குதல்; தி.மு.க. குண்டர்கள் அராஜகம்!

Share it if you like it

காஞ்சிபுரத்தில் கோயில் திருப்பணி தொடர்பாகவும், கோயில் இடத்தில் கார் பார்க்கிங் அமைப்பதை தட்டக் கேட்டதற்காகவும் அர்ச்சகர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் அமைந்திருக்கின்றன. தவிர, காஞ்சிபுரம் பட்டு உலகளவில் மிகவும் பிரபலமானது. இதனால், கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்கும், பட்டுப்புடவைகள் வாங்குவதற்கும் வெளியூர்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்கள் கார் நிறுத்த போதுமான இடம் காஞ்சிபுரத்தில் இல்லை. எனவே, தங்களது கார்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டுச் சென்று விடுகின்றனர். இதன் காரணமாக, காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆகவே, காஞ்சிபுரத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. ஆனால், பெரியளவில் கார் பார்க்கிங் அமைக்க மாநிகராட்சிக்குச் சொந்தமாக அவ்வளவு பெரிய இடம் இல்லை. அதேசமயம், கோயில்களுக்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் இருககின்றன.

இதையடுத்து, கோயில் நிலத்தில் மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, உலகளந்த பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் வந்து ஆய்வு செய்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருப்பணி வேலைகளை செய்யப்போவதாக, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. இந்த சூழலில், கோயில் திருப்பணியில் நடக்கும் முறைகேடு தொடர்பாக, உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகர் தாமுசாமி என்பவர் தட்டிக் கேட்டிருக்கிறார். மேலும், கோயில் நிலத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கவும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். தவிர, கோயில் இடத்தில் கார் பார்க்கிங் அமைக்கக் கூடாது என்று கோர்ட்டில் தடை உத்தரவு பெறவும் நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், தங்களது கொள்ளைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அர்ச்சகர் தாமுசாமியை கடத்திச் சென்று, ஒரு இடத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கி இருக்கிறது ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு கும்பல். இதில், தாமுசாமிக்கு தலை மற்றும் வாயில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை அக்கும்பல் விடுவித்திருக்கிறது. பின்னர், வீடு திரும்பிய அர்ச்சகர் தாமுசாமி, தனக்கு நேரிட்ட கொடுமை குறித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், போலீஸார் புகாரை ஏற்க மறுத்து விட்டனராம். கோயில் அர்ச்சகர் ஒருவர் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அர்ச்சகர்கள் மட்டுமின்றி பக்தர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it