தமிழகத்தில் ஜாதியை ஒழித்த பெருமை திராவிட கட்சிகளை தான் சேரும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கனிமொழி. இவர், கடந்த கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினை காட்டிலும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி தெளித்தார். நாங்கள், ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறினார். மதுவினால் தமிழக பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக வேதனையுடன் பேசியிருந்தார்.
இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த ஆட்சி அமைந்து 16 மாதங்களை கடந்து விட்டது. எனினும், மதுவிலக்கு குறித்து இன்று வரை வாய் திறக்காமல் கனிமொழி கள்ள மெளனம் காத்து வருகிறார்.
இதனிடையே, தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஜாதியை ஒழித்தாக தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார் ;
சென்னை தியாகராய நகரில் தி.மு.க.வின் சார்பில் சுற்றுச்சூழல் அணி ஏற்பாடு செய்து இருந்த கருத்தரங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி, மற்ற மாநிலங்களில் தங்களது பெயரை கேட்டால் ஜாதி பெயரோடு தான் குறிப்பிடுவார்கள். ஆனால், தமிழகத்தில் வெறும் பெயரை மட்டுமே வைத்து கொண்டு ஜாதியை முடிவு செய்ய முடியாது. இதற்கு, முக்கிய காரணம் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
உண்மை என்னவெனில், தமிழகத்தில் விடியல் ஆட்சி அமைந்த பின்புதான் ஜாதி பாகுபாடு மற்றும் ஜாதி தீண்டாமை தலைவிரித்து ஆடி வருகிறது. அதற்கு, கீழ் கண்ட காணொளிகளே சிறந்த உதாரணம் என்று கூறலாம்.